Friday, 7 July 2017

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்



சுங்கை சிப்புட்-
இங்கு திகமான இந்தியர்கள் வாழ்கின்ற தாமான் துன் சம்பந்தனில் நிலவுகின்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என கோலகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினர் லெட்சுமணன் குறிப்பிட்டார்.

இக்குடியிருப்பில் கால்வாய், சாலை போன்ற பிரச்சினைகள் நிலவுகின்றன. குழிகள் நிறைந்துள்ள சாலைகள் புதுப்பிக்கப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோல் அசுத்தமான நிலையில் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் கால்வாய்களை துப்புரவு பணி மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் இங்கு நிலவுகின்ற சுகாதாரப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தொகுதி மஇகா முழு மூச்சாக செயல்படுகிறது. கடந்த இரு தவணைகளாக இத்தொகுதி எதிர்க்கட்சி வசமாகியிருந்தாலும் தொகுதி மஇகா தனது செயல்பாட்டை குறைத்து கொண்டதில்லை என தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன் குறிப்பிட்டார்.


வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இங்கு களமிறங்கும் தேசிய முன்னணி வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் மக்கள் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அவ்வகையில் தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என மணிமாறன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment