சுங்கை
சிப்புட்-
பல்வேறு
சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மலேசிய மக்கள் சிந்தனை மேம்பாட்டு இயக்கம் (கர்மா)
இங்குள்ள இரு தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒலிபெருக்கி சாதனங்களை வழங்கியுள்ளது.
காராய், எங்கோர் தமிழ்ப்பள்ளி,
எல்பில் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகியவை பள்ளியின் மேம்பாட்டு நடவடிக்கைக்கு
உதவும் வகையில் ஒலிபெருக்கி சாதனம் வேண்டும் என 'கர்மா'
இயக்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தன.
இந்த கோரிக்கையை
ஏற்ற 'கர்மா' இயக்கம் பள்ளியின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு
உதவும் பொருட்டு இந்த ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கப்பட்டதாக அதன் தலைவர் வின்சென்ட்
டேவிட் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளி
மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு 'கர்மா'
இயக்கம் என்றும் உறுதுணையாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின்போது
எங்கோர் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை திருமதி
பொற்செல்வி, எல்பில் தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மகாதேவன்
ஆகியோர் ஒலிபெருக்கி சாதனங்களை பெற்றுக் கொண்டனர்.
No comments:
Post a Comment