Thursday, 6 July 2017

சொத்து கணக்குகளை முழுமையாக காட்டவில்லையா? சிவநேசனுக்கு எதிராக டாக்டர் ஜெயகுமார் வழக்கு பதிவு



ஈப்போ-
தனது சொத்து விவரங்களை முழுமையாக அறிவிக்கவில்லை என தன் மீது அவதூறு அறிக்கை விடுத்த சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசனுக்கு எதிராக சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் நீதிமன்றத்தின்  வழக்கு தொடர்ந்துள்ளார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக தாம் பதவியேற்றது முதல் சொத்து விவரங்களை பொதுவில் அறிவித்து வருகிறேன். இந்நிலையில் தன்னுடைய  முழுமையான சொத்து விவரங்களை  வெளிப்படையாக அறிவிக்கவில்லை என தமிழ் நாளிதழ் ஒன்றின் வழி சிவநேசன் அறிக்கை விடுத்தார்.

தன்னுடைய தந்தை ஒரு மருத்துவ நிபுணராக இருந்தபோதிலும் என்னுடைய சொத்து விவரங்களில் அவருடைய சொத்துகளை கணக்கிட முடியாது என தெளிவுப்படுத்திய டாக்டர் ஜெயகுமார், தான் விடுத்த அறிக்கையை சிவநேசன் திரும்பப் பெற்றுக் கொள்வதோடு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தேன்.

தான் சார்ந்திருக்கும் பிஎஸ்எம் கட்சியை பொறுத்தவரை நகராண்மைக் கழக உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என எத்தகைய பதவியை வகித்தாலும் ஆண்டுக்கொரு முறை பொதுவில் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்பது கொள்கையாகும்.

அதற்கேற்ப ஆண்டுக்கொரு முறை சொத்துகளை அறிவிக்கும் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தும்  சிவநேசன் விவகாரம் குறித்து பேராக் மாநில ஜசெகவைச் சேர்ந்த ஙே கூ ஹாம், அதன் துணைத் தலைவர் வீ.சிவகுமார், லியூ சின் தோங், அந்தோணி லோக் போன்ற பலரிடம் இதற்கு தீர்வு காண முறையிட்டேன். ஆனால் அது வெற்றியளிக்கவில்லை.

எனவே, எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அறிக்கை விடுத்த சிவநேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக டாக்டர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.


இங்கு ஈப்போ உயர்நீதிமன்றத்தில் இன்று காலை டாக்டர் ஜெயகுமார் இந்த வழக்கை பதிவு செய்தார்.

No comments:

Post a Comment