புத்ராஜெயா-
பக்காத்தான்
ஹராப்பானின் சட்டவிதிகளை
ஏற்றுக் கொண்டுள்ள தேசிய பதிவு இலாகா (ஆர்ஓஎஸ்) அக்கூட்டணியின் சின்னத்தை சீரமைப்பு செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது என துன்
டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.
இக்கூட்டணியின்
சட்டவிதிகளை ஆராய்ந்துள்ள ஆர்ஓஎஸ் அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என நல்ல அபிப்ராயத்தை
வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் அதன் சின்னத்தை மட்டுமே மறுவடிவம்
செய்யுமாறு கோரியுள்ளது.
'பக்காத்தான்' மற்றும் 'ஹராப்பான்'
என இரு பெயர்களை கொண்டுள்ள
போதிலும் சின்னத்தில் 'ஹராப்பான்'
என குறிப்பிடுவது
ஏற்புடையதாகாது.
இக்கூட்டணி
தனது சின்னத்தை மேம்படுத்தியுள்ள நிலையில் இன்னும் இரு தினங்களில் அதன் மறுவடிவம் பூர்த்தி
செய்யப்படும். பின்னர் விண்ணப்பங்கள், கூட்டணியின்
சட்டவிதிகள் முறையாக சமர்ப்பிக்கப்படும் என இக்கூட்டணியின் பொதுத் தலைவரான துன் டாக்டர் மகாதீர்
குறிப்பிட்டார்.
கடந்த
வாரம் இணைய பதிவின் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கட்ட வேளையில் இன்று புத்ராஜெயாவில்
உள்ள ஆர்ஓஎஸ் அலுவலகத்திற்கு வந்த அவர், சில கடிதங்கள் தொடர்பில்
கலந்துரையாடப்பட்டது எனவும் அவர் சொன்னார்.
No comments:
Post a Comment