ஈப்போ-
இரு குண்டர் கும்பல்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் குண்டர் கும்பல் உறுப்பினர்களுக்கு
எதிராக போலீசார் தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை
இங்கு ஈப்போ திடலில் கால்பந்து விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்த ஏற்பட்ட வாக்குவாதம்
பின்னர் பெரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முடிந்தது. இதில் இரு கும்பல்களுக்கிடையில்
நடைபெற்ற இந்த சம்பவத்தில் மூன்று பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகினர்.
முழங்கையிலும்
வயிற்றுப் பகுதியிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான அந்த
மூன்று பேரும் ஈப்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச்
சூடு சம்பவம் தொடர்பில்
21 முதல் 35 வயதுக்குட்பட்ட நால்வரை போலீசார் கைது
செய்துள்ள நிலையில் இச்சண்டையில் ஈடுபட்ட ஏனைய குண்டர் கும்பல் உறுப்பினர்களை தேடும்
பணி முடக்கி விடப்பட்டுள்ளது என பேராக் மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஹஸ்னான் ஹசான்
குறிப்பிட்டார்.
துப்பாக்கிச்
சூட்டில் காயமடைந்த மூவரின் உடல்நிலை சீராக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment