உலக பணக்காரர் பட்டியலில் பல ஆண்டுகளாக
முதல் இடத்தை பிடித்து வந்த பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்
அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ்.
ஜெப் பெஜோஸ் சொத்து மதிப்பு 90.5 பில்லியன் டாலர்களாக
உயர்ந்துள்ளது. பில்கேட்சின் சொத்து வியாழக்கிழமை 9 பில்லியன் டாலராக இருந்தது. அமேசான் பங்குகள் உயர்ந்த
சில நிமிடங்களில் முதல் இடத்தை பிடித்தார் ஜெப் பெஜோஸ்.
பெஜோஸ்-க்கு அமேசான் நிறுவனத்தில்
17 சதவீதம் பங்குகள் உள்ளன. 53 வயதான பெஜோஸின்
பெரும்பாலான சொத்துக்கள் அமேசான் நிறுவனத்தில் இருந்தாலும் வாஷிங்டன் போஸ்ட் செய்திதாள்,
தனியார் விண்வெளி நிறுவனம் 'புளு ஆர்ஜின்'
ஆகியவற்றின் உரிமையாளராகவும் உள்ளார்.
No comments:
Post a Comment