Saturday, 1 July 2017

'அனைத்துலக சேலை தினம்' பெண்மையை 'தேவதை'யாய் காட்டும் மாயசக்தி கொண்டது 'சேலை'- பகுதி-1



"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு", "சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க", 'நீ கட்டும் சேலை மடிப்புல நான் மயங்கி போனேனே.." என சேலைகள் பற்றி பெருமை பாடாத தமிழ்ப்பாடல்களே இல்லை எனலாம்.

'சேலை' என்பது ஒரு பெண்ணின் உடலை மறைப்பதற்கு பயன்படுத்தும் உடையாக மட்டுமல்லாமல் நமது இந்தியர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் ஒரு பாரம்பரிய உடையாகவும் ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மனை அலங்கரிக்கக்கூடிய புனிதம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

அவ்வகையில்  ஜூலை 1ஆம் தேதி 'அனைத்துலக சேலை தினம்' கொண்டாடப்படுகிறது. ஒரு பொது நிகழ்வில் சேலைக்கு விதிக்கப்பட்ட தடையே பெரும் புரட்சியாக மாறி இன்று அதனையே ஒரு தினமாக அனுசரிக்க வேண்டிய கடப்பாடாக மாற்றிய பெருமை சில தலைவர்களுக்கும் நமது மகளிருக்குமே சேரும்.

அவ்வகையில் இன்று கொண்டாடப்படும் 'அனைத்துலக சேலை தினம்' குறித்து நமது பெண்கள் கூறும் கருத்துகளை 'பாரதம்' மின்னியல் ஊடகம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறது.

1. திருமதி லெட்சுமி நாயர், பிரேமிளா நாயர், பரமேஸ்வரி நாயர்
- 'தமிழ்' என்பது ஒவ்வோர் இந்தியரின் அடையாளமாக எவ்வாறு கருதப்படுகிறதோ அவ்வாறே ஒவ்வோர் இந்தியப் பெண்மணியின்  கலாச்சார உடையாக சேலை திகழ்ந்திட வேண்டும்.

2.  திவ்யதர்ஷினி
- 'சேலை' ஒவ்வோர் இந்தியப் பெண்களின் அடையாளம் என்பதை சொல்ல பெருமைப்படுகிறேன்.

3. மாலினி
- மங்கையரின் மானத்தை காப்பது மட்டுமல்லாது அவர்களை கலாச்சாரம் நிறைந்த அழகு பதுமையாக காட்டுவதும் 'சேலை' தான்.

4. தாரணி
- ஒவ்வொரு மகளிரின் ஆரம்பம் முதல் இறுதி வரை 'சேலை' மட்டுமே அவர்களின் அடையாளமாக திகழ வேண்டும்.

5. நீலா
-  'சேலை' உடுத்துவதை இன்றுமட்டுமல்ல ஒவ்வொரு நாளும் பெருமையாக கருதுகிறேன்.


- தொடரும்...

No comments:

Post a Comment