Tuesday, 16 May 2017

மஇகாவுக்கு எதிராக போர் - பெர்க்காசா அறிவிப்பு

மஇகாவுக்கு எதிராக போர்- பெர்க்காசா அறிவிப்பு!


கோலாலம்பூர்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் மலாய் வாக்காளர்கள் மஇகாவை ஆதரிக்கக்கூடாது எனும் பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருப்பதாக பெர்க்காசா அறிவித்துள்ளது.

இஸ்லாமிய தீவிரவாத  அமைப்புடன் (ஐஎஸ்பெர்க்காசா அமைப்பை சம்பந்தப்படுத்தி மஇகாவின் பொருளாளர் டத்தோஸ்ரீ எஸ்.வேள்பாரி விடுத்துள்ள அறிக்கைக்கு எதிராக இந்நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக  பெர்க்காசாவின் தலைமைச்  செயலாளர் சைட் ஹசான் சைட் அலி தெரிவித்துள்ளார்.

சமயப் பேச்சாளர் ஸாகீர் நாய்க் விவகாரம் தொடர்பில் அறிக்கை விடுத்த வேள்பாரி, ஸாகீர் நாய்க்கை தற்காக்கும் பெர்க்காசாவை ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் ஒப்பிட்டு பேசி இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தியுள்ளார்.

இதன் விளைவாக மஇகாவுக்கு எதிரான போரை பெர்க்காசா மேற்கொள்ளவுள்ளது. வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் மலாய் வாக்காளர்கள் மஇகாவை புறக்கணிக்கும்படி வலியுறுத்துகிறோம்.

முதல்கட்ட பிரச்சாரமாக மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியத்தின் நாடாளுமன்றத் தொகுதியான சிகாமட்டில் மேற்கொள்ளவிருக்கிறோம் என செய்தியாளர் சந்திப்பில் சைட் ஹசான் குறிப்பிட்டார்.

அதோடு பெர்க்காசா அமைப்பை தவறாக சித்திரித்து அவதூறு பரப்பிய வேள்பாரி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment