லட்சகணக்கானோர் திரண்ட பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்!
கிள்ளான்,
கிள்ளான் வட்டாரத்தில் 127 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தென்கிழக்காசிய திருப்பதி என்றழைக்கப்படும் கிள்ளான் ஸ்ரீ் சுந்தரராஜா பெருமாள் கருங்கல் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு எம்பெருமானின் தரிசனம் பெற்றனர்.
அண்மையில் நடைபெற்ற இந்த கருங்கல் ஆலய கும்காபிஷேகத்தைக் காண மலேசியா முழுவதிலுள்ள மக்கள் அலைகடலாய் திரண்டனர். ஆலயத் தலைவர் சங்கரத்னா, திருப்பணிச் செம்மல் சித.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் இந்த கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் லோட்டஸ் டத்தோ ரேனா துரைசிங்கம், தீபா, டத்தோ ஆறுமுகம், டத்தோ ஹரிகிருஷ்ணா பத்துமலை, ‘சென்னை சில்க்ஸ்’ டத்தோ தனசேகரன் வெள்ளைகூத்தன், ‘காயத்ரி பட்டுமாளிகை’ டத்தோ ரகுமூர்த்தி, ஸ்ரீ குமரன்ஸ் குமார் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment