தாய்மார்களை
தனிமைப்படுத்தும்
'தலையணை மந்திரம்'
- டத்தோ முருகையா
ஈப்போ-
திருமணத்திற்கு
பின்பு ஓதப்படும்
'தலையணை மந்திர'த்தால் பல தாய்மார்கள் தங்களது பிள்ளைகளிடமிருந்து
தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதுவே பின்னாளில் அவர்கள் ஆதரவற்றவர்களாக
மாறுவதற்கு வழிவகுக்கிறது என முன்னாள் துணை அமைச்சர் டத்தோ டி.முருகையா குறிப்பிட்டார்.
அன்னையர்
தினம் என்றாலே அன்னையரின் புகழை பாடும் ஒரு நாளாகவே உருவெடுத்து விட்டது. ஆனால் அந்த
நாளில் அன்னையர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே சிறந்தது ஆகும்.
தாயாரின்
அன்பையும் தியாகத்தையும் அவர் வாழும் காலத்திலேயே
நாம் உணர வேண்டும். அதை விடுத்து அரவது காலத்திற்கு பின்னால் புகழுரைப்பது நியாயமாகாது என பேராக்
மாநில அபிராம் இயக்கத்தின் அன்னையர் தின விழாவில் உரையாற்றும்போது இவ்வாறு கூறினார்.
பல குடும்பங்களில்
தாயாரின் நிலை பரிதாபமாக்கப்படுவது 'தலையணை மந்திரம்' ஆகும். திருமணத்திற்கு முன் தாயாரின் பாசபிணைப்பில் வளரும்
மகன் திருமணத்திற்கு பின் தாயை தனிமைப்படுத்தும் நிலைக்கு ஆளாகிறான்.
சமுதாயத்தில்
இந்நிலை மாற வேண்டும்.
பிள்ளைகள் தங்களது தாயாரை கடைசி காலம் வரை உடன் வைத்து பாதுகாக்க வேண்டும்
என டத்தோ முருகையா தெரிவித்தார்.
இந்த நிகழ்வில்
பேராக் மாநில தமிழ் நேசன் நிருபர் எஸ்.பாலகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு
சிறப்பு செய்யப்பட்டு அனிச்சல் வெட்டப்பட்டது.
இந்த நிகழ்வில்
அபிராம் இயக்கத்தின் தலைவர் சண்முகம் உட்பட பிரமுகர்களும் இயக்கப் பொறுப்பாளர்களும்
திரளான அன்னையர்களும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment