Tuesday, 16 May 2017

ஸாகீர் நாய்க்: இந்தியாவின் நடவடிக்கையில் மலேசியா தலையிடாது - டத்தோஸ்ரீ ஸாயிட்

ஸாகீர் நாய்க்: இந்தியாவின் நடவடிக்கையில் மலேசியா தலையிடாது! -டத்தோஶ்ரீ ஸாயிட்







கோலாலம்பூர்-

சர்ச்சைக்குரிய சமயப் பேச்சாளர் ஸாகீர் நாய்க்  மீது இந்திய அரசாங்கம் மேற்கொள்ளும் எத்தகைய நடவடிக்கையிலும் மலேசிய அரசாங்கம் தலையிடாது என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.


இந்து சமயத்தை இழிவுப்படுத்தும் வகையில் சொற்பொழிவு ஆற்றி வரும் ஸாகீர் நாய்க்கிற்கு எதிராக கண்டனக்குரல்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனன் கண்டனம் தெரிவித்தது.



அண்மையில் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடியை சந்தித்த மைக்கி நிர்வாகத்தினர் அந்நியத் தொழிலாளர்கள், மலேசிய இந்திய வியூக திட்ட வரைவில் (புளூபிரிண்ட்) வர்த்தகம் தொடர்பான செயல்திட்டங்கள், ஜாகீர் நாய்க் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து கருத்துரைத்த டத்தோஸ்ரீ ஸாயிட்சமயப் பேச்சாளர் ஸாகீர் நாய்க் மீது இந்திய அரசாங்கம்  எடுக்கும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் மலேசிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும். அவரை கைது செய்ய முற்பட்டால் அதில் மலேசியா தலையிடாது.

இந்தியாவுக்கு மலேசியா முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்த அவர், தற்போது ஸாகீர் நாய்க் மலேசியாவில் இல்லை என விவரித்தார்.

அதோடு, மைக்கி முன்வைத்துள்ள பரிந்துரைகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று கலந்து பேசுவேன். நகர்ப்புற வறுமை துடைத்தொழிப்பு விவகாரத்திற்கு தலைமையேற்பதால் இந்த செயல் திட்டத்தில் மைக்கியை இணைத்துக் கொள்வதில் எந்தவொரு தயக்கமும் இல்லை என்றார்.



இவ்வேளையில் பல்வேறு பணிசுமைகளுக்கு மத்தியிலும் மைக்கிக்காக்க நேரம் ஒதுக்கி சிறந்த கலந்துரையாடலின் வழி புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடிக்கு  மைக்கி தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கே.கென்னத் ஈஸ்வரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

எழுத்து: வெற்றி விக்டர்

No comments:

Post a Comment