மஇகா வேட்பாளர்களின்வெற்றி உறுதி செய்யப்படும்!
ஈப்போ-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில்
களமிறங்கும் மஇகா வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய தகுந்த வியூகம் வகுக்கப்பட்டு
வருவதாக மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வி.இளங்கோ தெரிவித்தார்.
கடந்த 2008, 2013ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற
பொதுத் தேர்தல்களில் மஇகா வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். மாநில
அரசாங்கத்தில் இந்தியர் பிரதிநிதித்துவம் இல்லாத மாநில இந்தியர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவாகும்.
வரும் 14ஆவது பொதுத்
தேர்தலில் மஇகாவின் 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் மஇகா வேட்பாளர்களின் வெற்றியை உறுதி
செய்வதற்கு ஏதுவான வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
மஇகா வேட்பாளர்கள்
போட்டியிடும் தொகுதிகளின் வாக்காளர்ளின் ஆதரவை பெறுவது, களப்பணி இறங்கி
மக்களுக்கு சேவை செய்வது, தேசிய முன்னணிக்கான ஆதரவை வலுப்படுத்துவது
உட்பட பல வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
மஇகா தேசியத்
தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் 14ஆவது
பொதுத் தேர்தலில் மஇகாவின் வெற்றி செய்யப்படுவதற்கு ஏதுவாக பேராக் மஇகா களப்பணியாற்றி
வருகிறது என அவர் சொன்னார்.
No comments:
Post a Comment