Tuesday, 16 May 2017

ஐபிஎப் கட்சிகள் மஇகாவில் இணைய வேண்டும் - டத்தோஸ்ரீ சுப்ரா

ஐபிஎப் கட்சிகள் மஇகாவில் இணைய வேண்டும்
- டத்தோஸ்ரீ சுப்ரா


கோலாலம்பூர்-
மஇகாலிருந்து பிரிந்து சென்றவர்களின் கட்சியான ஐபிஎப், மஇகாவில் இணைவதை தாம் வரவேற்பதாக  அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

..காவின் சரித்திரத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் உருவானதுதான் ஐ.பி எப் கட்சி. அது நிச்சயமாக இந்திய சமுதாயத்தின் சரித்திரத்தில் மனதை நோக வைக்கின்ற ஒரு விபத்து என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால், அதன் விளைவுகள் சமுதாயத்தையும் பாதித்திள்ளது.

இனியும் தொடர்ந்து அப்படித்தான் இருக்க வேண்டுமா? இந்நிலையை மாற்ற முடியுமா? ஒன்றுபட முடியுமா? என்கின்ற சாத்தியங்களை ஆராயக்கூடியது நமக்கிருக்கக்கூடிய தலையாய கடமையாகும்.

இந்தியர்களைப் பிரதிதிக்கக்கூடிய கட்சி என்கின்ற அடிப்படையிலும் இந்தியர்களைப் பிரதிநிதிக்கக்கூடிய ஒரு தலைவன் என்கின்ற அடிப்படையிலும் ம..காவில் இருக்கக்கூடிய எங்களது தலைவர்களையும், உறுப்பினர்களையும், மக்களையும் எவ்வாறு பேணிக் காக்கின்றோமோ அதேப்போன்று ஐ.பி.எப் கட்சியையும் பேணிக் காக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

அதற்கு நீங்கள் (.பி.எப்) தயாராக இருக்கின்றீர்களா என்பதே இப்போதைய கேள்வி. நீங்கள் சேரப்போகும் காலக்கட்டத்தில் உங்களுக்காக ம..காவின் கதவுகள் எப்பொழுதும் திறந்திருக்கும். ஏனென்றால், ..காவைப் பொறுத்தவரையில் குறிப்பாக என்னைப் பொறுத்தவரையில் திறந்த மனப்பான்மையில்தான் கட்சி வழிநடத்தப்படுகின்றது.

எனக்கிருக்கக்கூடிய கடமையின் அடிப்படையில் ஒன்றாகச் சேரும் அழைப்பை விடுத்துவிட்டேன். ஆனால், எந்தச் சூழ்நிலையில், எந்தக் காலக்கட்டத்தில் என்பதனை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

வரக்கூடிய பொதுத்தேர்தலில் வேறுபட்ட நிலையில் இல்லாமல் ஒருங்கிணைக்கப்பட்டு நாம் அனைவரும் ஒன்றாக சேவையாற்றினோம் என்றால் நிச்சயம் இந்திய சமுதாயத்தின் அரசியல் வலுவை மற்றவர்கள் உணரக்கூடிய வகையில் நாம் செயல்படுத்த முடியும் என ஐபிஎப் கட்சியின் தலைவர்களுடனான சந்திப்பு நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் ஒன்றுபட்ட.பி.எப் கட்சித் தலைவர் டத்தோ பஞ்சமூர்த்தி, .பி.எப் உத்தாமா கட்சித் தலைவர் மு.வீ மதியழகன், .பி.எப் கட்சியின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதனின் துணைவியார் புவான்ஸ்ரீ ஜெயஸ்ரீ ஆகியோர் உட்பட ஐ.பி.எப் கட்சி உறுப்பினர்களும் மலேசியத் திராவிட இயக்கத் தலைவர், நம்பிக்கை கழகத் தலைவர், கலைஞர் இயக்கக் கழகத் தலைவர் பலர் ஒன்றுபட்டுத் திரளாகக் கலந்து கொண்டனர்.
  

No comments:

Post a Comment