Monday, 8 May 2017

'நிறம் பார்க்க தெரியாதவன் நான்' - டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி

'நிறம் பார்க்க தெரியாதவன் நான்' -  டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி


கோலாலம்பூர்-
எனக்கு நிறம் பார்க்க தெரியாது. அதனால் தான் நான் அனைத்துத் தரப்பினருடன் ஒன்றாக பணியாற்றி கொண்டிருக்கிறேன் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

இந்த நாட்டின் முஸ்லிம், சீனர், இந்தியர், பூர்வக்குடி, ஈபான், கடஸான் உட்பட பல்வேறு தரப்பினர் உள்ளனர்அனைவரும் பல்வேறு மதங்களை, சமயங்களை பின்பற்றி கொண்டிருந்தாலும் நாம் அனைவரும் மலேசியர்களே ஆவர்.

இந்த சூழ்நிலையில் நான் யாரையும் பிரித்து பார்ப்பது கிடையாது. நான் முஸ்லீமாக இருந்தாலும் என்னுடன் பணியாற்றுவர்களில் பல மதங்களைச் சார்ந்தவர்களாக உள்ளனர்.

குறிப்பாக என்னுடைய வழக்கறிஞர்கள், கணக்காய்வாளர்கள், சட்ட வல்லுனர்கள் என பலவேறு பிரிவுகளில் இந்தியர்கள், சீனர்களுடன் நான் பணியாற்றி வருகிறேன்.

யாரையும் மத ரீதியாக பிரித்து பார்க்க தெரியாததால்  எனக்கு நிறம் பார்க்க தெரியாது. உண்மையில் நான் ஒரு 'வர்ண குருடன்' என பிரீக்பீல்ட்ஸ், விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற ஸ்ரீ முருகன் நிலையத்தின் 35ஆம் ஆண்டு விழாவை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment