Wednesday, 17 May 2017

மக்களுக்கு சேவையாற்றுவதை எங்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் -டத்தோ இளங்கோ

மக்களுக்கு சேவையாற்றுவதை
எங்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்!
-டத்தோ இளங்கோ

சுங்கை சிப்புட்-
மக்களுக்கான தேசிய முன்னணி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெறும் தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் அல்ல. மாறாக மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் அதிகாரப்பூர்வ நடவடிக்கையாகும் என பேராக் மாநில மந்திரி பெசாரின் இந்தியர் விவகார சிறப்பு ஆலோசக்லர் தெரிவித்தார்.

இந்நாடு பல இன மக்களை கொண்டுள்ள நாடாகும். அதில் இன ரீதியிலான நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர் நிறுத்திக் கொண்டு எங்களை  போன்று களத்தில் இறங்க வேண்டும்.

பொய்யான வாக்குறுதிகள், அவதூறான தகவல்கள் ஆகியவையே எதிர்க்கட்சியினரின் நடவடிக்கையாக திகழ்கிறது. இதனை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

மாநில மந்திரி பெசாரின் மக்கள் நல மேம்பாட்டு சந்திப்பு என்பது இம்மாநிலத்திலுள்ள மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்கான திட்டமாகும். இதனை வெறும் தேர்தலுக்காக நடத்தப்படுவதில்லை.

கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக இந்நடவடிக்கையை மேற்கொண்டு  வருகிறோம் என இங்கு மாநாட்டு மையத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் டத்தோ இளங்கோ கூறினார்.

மக்களுக்கு சேவையாற்றுவதை எங்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். மாறாக எங்களை தூற்றியே அரசியல் நடத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment