எல்பில் தமிழ்ப்பள்ளி இணைக்கட்டடம் திறப்பு விழா கண்டது
சுங்கை சிப்புட்-
எல்பில் தோட்டத் தமிழ்ப்பள்ளியிம் இணைக் கட்டடத்தை பிரதர் துறை
துணை அமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி திறந்து வைத்தார்.
கல்வியமைச்சு வழங்கிய 60,000 வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த
இணைக் கட்டடம் 3 வகுப்பறைகளை உள்ளடக்கியுள்ளது.
இக்கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றிய டத்தோஸ்ரீ தேவமணி,
தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்து கொண்டுதான் வருகிறது. அரசாங்கம் எந்தவொரு தமிழ்ப்பள்ளியையும் கைவிட்டதில்லை.
ஆனால் எதிர்க்கட்சியினர்தான் தங்களின் அரசியல் நோக்கதிற்காக பல்வேறு பொய்
பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் என
அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment