Tuesday, 16 May 2017

"நன்றி ஆசிரியர்களே" டுவிட்டரில் பிரதமர் பதிவு

"நன்றி ஆசிரியர்களே"
டுவிட்டரில் பிரதமர் பதிவு
கோலாலம்பூர்-
வருங்கால மாணவச் சந்ததிகளை உருவாக்குவதில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் மிகவும் அளப்பரியது என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் புகழாரம் சூட்டினார்.

"நன்றி ஆசிரியர்களே" அனைத்து ஆசிரியர்களுக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டத்தோஸ்ரீ நஜிப் தமது டுவிட்டர் அகப்பக்கத்தில்  'நன்றியை' பதிவு செய்துள்ளார்.



ஆசிரியர்கள் தங்களின் அயராத உழைப்பில் ஒவ்வொரு மாணவ கண்மணிகளையும் பரிபூர்ணமாக உருவாக்கி வருகின்றனர்.

'நாட்டிற்கும் இனத்திற்கும் சிறந்தவர்களாக நம்மை உருவாக்குவதில் ஒவ்வொரு ஆசிரியரின் வியர்வை துளிகளும் அடங்கியுள்ளன' என்றார் அவர்.

இன்று மே 16ஆம் தேதி ஆசியர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி கூறும் வகையில் 'ஆசிரியர் தினம்' கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment