பொருளாதார முன்னேற்றம்
தலைமைத்துவ
விவேகத்தைக் காட்டுகிறது
- டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன்
கோலாலம்பூர்-
உலக ரீதியில் பொருளாதார
வீழ்ச்சி தலைதூக்கியிருந்தாலும், மலேசியா
அத்தகைய இக்கட்டான சூழலிலிருந்து மாறுபட்டுச் செயல்படுகிறது என்பதை உறுதி செய்யும்
வகையில், தற்போது மலேசியாவின் பொருளாதார அடைவுநிலை அமைந்துள்ளது என ‘மைக்கி’ எனப்படும்
மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்கள் சம்மேளனத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர்
கெ. கென்னத் ஈஸ்வரன் வர்ணித்துள்ளார்.
2017ஆம் ஆண்டின் காலாண்டு முடிவின்படி மலேசியா
பொருளாதார ரீதியில் 5.6 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. 2016ஆம் ஆண்டின் காலாண்டில் இந்த வளர்ச்சி விகிதம் 4.5 விழுக்காடாக இருந்தது
என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பொருளாதார முன்னேற்றம்
தலைமைத்துவத்தின் விவேகத்தையும் வணிகர்களுக்கு ஒரு சாதகமான அறிகுறியையும் காட்டுகிறது.
இவ்வேளையில் உருமாற்றத்திட்டத்தின்
வழி பீடு நடைபோட்டு, பல இன்னல்களுக்கு மத்தியில் நாட்டின்
பொருளாதார வீழ்ச்சியை உருமாற்றி அமைக்க துடிப்புடன் செயல்பட்டு வரும் பிரதமர் டத்தோஸ்ரீ
நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவ செயல்திறனை மைக்கி பாராட்டுகிறது.
மலேசியாவின் இந்த ஆக்ககரமான செயல்பாடுகள்
உலக ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இது ஆசிய, ஐரோப்பிய
நாடுகளிடையேயான பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் மலேசியா தனித்துச் செயல்படுவதைக்
காட்டுகிறது.
தற்போது பிரதமரின் செயல்திட்டங்கள் அனைத்தும்
தூரநோக்குச் சிந்தனையுடனும், எல்லாச்
சமூகத்தினருக்கும் பயனளிக்கும் வகையிலும் இருப்பதால், நாம் அனைவரும் இத்தருணத்தில் ஒன்றிணைந்து, ஒரே குடையின் கீழ் செயல்பட்டு பிரதமருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்
என டான்ஸ்ரீ
கென்னத் ஈஸ்வரன் வர்த்தகர்களைக் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment