போர்ட் கிள்ளான் பாலசுப்ரமணிய ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா
போர்ட் கிள்ளான் -
போர்ட் கிள்ளானில் அமைந்துள்ள 180 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ பாலசுப்ரமணிய ஆலய சித்ரா பௌர்ணமி
திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
ஒவ்வோர் ஆண்டும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு
வரும் இந்த ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழாவில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
பொது விடுமுறை என்பதால் அதிகமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து இத்திருவிழாவில் கலந்து கொண்டனர் என்று ஆலயத் தலைவர் ஆர்.எஸ்.மணியம்
தெரிவித்தார்.
பால் குடம், பால் காவடி, மயில் காவடி, முடி காணிக்கை
என பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை முருகப் பெருமானுக்கு
செலுத்தினர். அதிகாலை முதல் இரவு வரையிலும் பக்தர்கள்
தங்களது
நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இன்று 11 மே 2017 இரவு 7.00 மணியளவில்
கோயில் வளாகத்திலிருந்து ரத ஊர்வலம் புறப்படும் என்றார் அவர்.
போர்ட் கிள்ளான் வட்டாரத்தில் சித்ரா பெளணர்மியே மிகப்
பெரிய திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment