'செடிக்'
சீரமைப்பு: தலைமை இயக்குனராக
என்.எஸ்.இராஜேந்திரன் நியமனம்
புத்ராஜெயா-
அண்மையில் அறிவிக்கப்பட்ட இந்தியர் வியூக வரைவு செயல் திட்ட (புளூபிரிண்ட்) அமலாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கு
ஏதுவாக 'செடிக்' அமைப்பு முற்றிலுமாக சீரமைக்கப்படுகிறது.
இந்த மறுசீரமைப்பின்
கீழ் எஸ்ஐடிஎஃப் (SITF ), சீட் எனப்படும் இந்திய ர்வர்த்தக வளர்ச்சி திட்ட செயலகம் (SEED), தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு செயல்வரைவு திட்டம் அமைப்பு (PTST) ஆகிய மூன்று அமைப்புகளும் செடிக் அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கப்படவுள்ளன.
சீரமைக்கப்பட்ட
அமைப்பின் தலைமை இயக்குனராக பேராசிரியர்
டத்தோ டாக்டர் என்.எஸ்.இராஜேந்திரன் நியமனம்
செய்யப்படுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இவரின் பணி இம்மாதம் 22ஆம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கிறது.
இந்த அமைப்பின்
கீழ் 6 பிரிவுகள் உருவாக்கப்படவுள்ளன.
1). கல்வி, இளைஞர் மேம்பாடு.
2). பொருளாதாரம், வருமானம் மேம்பாடு.
3). சமூக நலன், சமூக மேம்பாடு.
4). அடையாள ஆவணங்கள் ஒருங்கிணைப்பு.
5). ஆய்வு, சிறப்பு அமலாக்கம்.
6). சிறப்பு திட்டங்கள்.
இந்த பிரிவுகளின்
செயல் திட்டங்களை விரிவாக்கவும் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை அமர்த்தவும் சீரமைப்பு
வழிவகுக்கிறது.
மேலும்
இந்திய சமுதாயம் தொடர்பான அமைச்சரவைக் குழுவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் சுகாதார
அமைச்சரும் மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம்
'செடிக்' அமைப்பின் அமலாக்க மேற்பார்வையாளராக பதவி
வகிப்பார் என பிரதமர் துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment