மஇகா தொகுதிகளில் நேரடி மோதலுக்கு ஹிண்ட்ராஃப் தயார்
கோலாலம்பூர்-
வரும் பொதுத்
தேர்தலில் மஇகாவுடன் நேரடி மோதலை ஏற்படுத்தும் வகையில்
நம்பிக்கை கூட்டணியுடன் இணைவதற்கு விண்ணப்பிக்கப்படும் என ஹிண்ட்ராஃப் அறிவித்துள்ளது.
இந்தியர்களின்
உரிமைக்கு குரல் கொடுக்கும் அரசு சார்பற்ற பொது அமைப்பான ஹிண்ட்ராஃப். இந்தியர் வாக்குகள்
பெரும்பான்மையாக உள்ள 31 நாடாளுமன்றத் தொகுதிகள், 59 சட்டமன்றத் தொகுதிகளிலும் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெறுவதற்கு துணை புரியும்.
மஇகாவின்
அனைத்து தொகுதிகளிலும் நேரடி மோதல் ஏற்பட்டால் அதனை வென்றெடுக்க முடியும் என அதன் தலைவர்
பி.வேதமூர்த்தி தெரிவித்தார்.
31 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் (பக்காத்தான்) வெற்றி பெறுவதற்கு நாங்கள் உதவுவோம். இத்தொகுதிகளில்
வாக்காளர்களின் ஆதரவை திரட்டுவதற்கு களப்பணி ஆற்றுவோம் என்றார் அவர்.
இந்த 31 நாடாளுமன்றத்
தொகுதிகளும் கெடா, பேராக், சிலாங்கூர்,
கூட்டரசுப் பிரதேசம், நெகிரி செம்பிலான்,
ஜோகூர் பகாங் ஆகிய மாநிலங்களில் உள்ளன.
கடந்த 13ஆவது பொதுத்
தேர்தலில் மஇகா போட்டியிட்ட 9 நாடாளுமன்றத் தொகுதிகளில்
4 தொகுதிகளையும் 18 சட்டமன்றத் தொகுதிகளில்
5 தொகுதிகளையும் மட்டுமே வென்றன.
No comments:
Post a Comment