Wednesday, 17 May 2017

வாக்குரிமை இல்லாத மஇகாவினர்? அதிரடியாக களமிறங்கும் மஇகா

வாக்குரிமை இல்லாத மஇகாவினர்?
அதிரடியாக களமிறங்கும் மஇகா

கிள்ளான்
மஇகாவின் லட்சக்கணக்கான  உறுப்பினர்களில் 90,000 பேர் தங்களை இன்னும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளவில்லை என்பதை கண்டறிந்த மஇகா, அதற்கு தீர்வு காணும் வகையில் 23 இடங்களில் வாக்காளர் பதிவு முகாமை ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

நாடு தழுவிய நிலையில் உள்ள மஇகா உறுப்பினர்களை ஜூன் 15ஆம் தேதிக்குள் வாக்காளர்களாக பதிவு செய்யும் இலக்கை கொண்டிருப்பதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று கிள்ளான் தொகுதி மஇகா ஏற்பாட்டில் நடைபெற்ற வாக்காளர் பதிவு தின நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.

மஇகா உறுப்பினர்கள் மட்டுமன்றி அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள புதிய இந்திய வாக்காளர்களை பதிவு செய்வதிலும் மஇகா களமிறங்கியுள்ளது. இதற்கு கட்சி கிளைகள் தீவிரம் காட்டும் என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.விக்னேஸ்வரன், மஇகா தேசிய இளைஞர் தலைவர் சிவராஜ், கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment