ஆள்மாறாட்டம்; ஆண்டுப் பொதுக்கூட்டம் செல்லாது!
கோலாலம்பூர்-
மலேசிய
குற்றத்தடுப்பு இயக்கத்தின் சிலாங்கூர் மாநில 2ஆவது பொதுக் கூட்டம் செல்லாது என அதன்
கெளரவச் செயலாளர் பத்மநாபன் நடேசன்
தெரிவித்தார்.
ஆண்டுப்
பொதுக் கூட்டத்தில் நடந்த ஆள் மாறாட்டம், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலான
கணக்கறிக்கை, குளறுபடி போன்றவை சங்கப் பதிவின் அமைப்பு விதிகளை
மீறியுள்ளதால் இந்த கூட்டம் செல்லாது என அறிவிக்கப்படுகிறது.
தேர்தல்
ஆணையர், சங்கப் பதிகவத்தின் பிரதிநிதி என தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட ஆனந்தகுமார் ஆள் மாறாட்டம் செய்திருப்பதும் இதை
செய்தது முத்தாலு செம்மாஞ்சல் தான் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனந்த குமார் சங்கப் பதிவகத்தின்
பிரதிநிதி கிடையாது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தில்
எதிர்த்து பேசுபவர்களை பேச விடக்கூடாது என சிலாங்கூர் மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்ட எஸ்.முத்தாலு
கேட்டுக் கொண்டுள்ளது ஆனந்த குமாரை விசாரித்தபோது தெரியவந்துள்ளது.
கால அவகாசத்திற்குள்
கூட்டத்திற்கான அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டதா?, அனைத்து உறுப்பினர்களுக்கும்
அறிக்கை அனுப்பப்பட்டதா?, தீர்மானங்கள் செயற்குழுவில் பேசப்பட்டதா?,
தயார் செய்யப்பட்ட ஆண்டறிக்கை ஏன் முழுமையான தகவல்களை கொண்டிருக்கவில்லை?,
கணக்காய்வாளரின் கையொப்பமின்றி கணக்கறிக்கை தயார் செய்யப்பட்டது ஏன்?,
புதிய உறுப்பினர்களின் பதிவு ஏன் தடுக்கப்பட்டது? போன்ற கேள்விகளை தாங்கிய பதில் கோரும் கடிதம் அனுப்பட்டது.
அதோடு, சிலாங்கூர்
மாநிலத்தின் 2017-2018ஆம் ஆண்டுக்கான கூட்டம் செல்லாது என இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment