நம்பிக்கை
கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக
துன் மகாதீரை
முன்மொழியலாம்
- டத்தோ ஸைட்
பெட்டாலிங்
ஜெயா-
நம்பிக்கை
கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக துன் டாக்டர் மகாதீர் முகமதுவை முன்மொழியலாம் என முன்னாள்
அமைச்சர் டத்தோ ஸைட் தெரிவித்தார்.
நாட்டின்
பொதுத் தேர்தல் வெகு விரைவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் பிரதமர்
வேட்பாளர் யார் என்பதை நம்பிக்கை கூட்டணி இன்னமும் அறிவிக்காமல் உள்ளது.
'நம்பிக்கை கூட்டணிக்கு வேட்பாளர்
உள்ளது. ஆனால் தலைவர்கள் அதை தெரிவிக்க அஞ்சுகின்றனர்.
இது மிகப் பெரிய விவகாரமாக உள்ளதால் இம்முடிவை சொல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்'.
இக்கூட்டணி
துன் மகாதீரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது மிக அவசியமாகும். ஏனெனில் அவர் மூத்த தலைவர் என்பதோடு பெல்டா வாக்காளர்களை கவர்வதற்கும் நம்பிக்கை கூட்டணி வெற்றி
பெறுவதற்கும் மிக பெரிய உறுதுணையாக இருக்கும்.
நம்பிக்கை
கூட்டணி அங்கத்தினர் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து கடந்த 22 ஆண்டுகளாக
நாட்டை ஆட்சி புரிந்த துன் மகாதீர் மீண்டும் பிரதமராக பதவியேற்பதற்கு முன்வர வேண்டும்
என தெரிவித்த ஸைட், வெற்றி பெறுவதற்கு இதுவே வழி என குறிப்பிட்டார்.
பிரதமர்
வேட்பாளர் குறித்து அவ்வப்போது கேள்விகள் எழுப்பப்படுவதால் நம்பிக்கை கூட்டணி வாக்காளர்களுக்கு
நம்பிக்கை ஏற்படுத்த முடியவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment