Saturday, 13 May 2017

பிகேஆரிடமிருந்து பிரிந்தது பாஸ்

பிகேஆரிடமிருந்து பிரிந்தது பாஸ்



கோலாலம்பூர்-
மூன்று முக்கிய காரணங்களால் பிகேஆர் கட்சியுடனான உறவு துண்டித்துக் கொள்ளப்படும் என பாஸ் கட்சியின் ஆலோசனை மன்றம் தெரிவித்துள்ளது.

'மக்கள் கூட்டணி' எனும் கூட்டமைப்பின் கீழ் பிகேஆர், ஜசெக, பாஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை எதிர்கொண்டன.

ஆனால் சில வருடங்களிலேயே ஜசெகவிடனான உறவை பாஸ் துண்டித்துக் கொண்டது. இதனையடுத்து 'மக்கள் கூட்டணி' சிதைந்து விட்டது என பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தின்ஸ்ரீ வான் அஸிஸா அறிவித்தார்.

ஆயினும் பிகேஆர் கட்சியிடன் ஒன்றிணைந்திருந்த பாஸ் கட்சி  அதனிடமிருந்து பிரிந்து செல்லும் என உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த பிரிவுக்கு 3 காரணங்களை அக்கட்சி முன்வைத்துள்ளது.

1). பிகேஆர்வுடனான உறவை துண்டித்துக் கொள்வதற்கு பாஸ் கட்சி மூன்று காரணங்களைத் தெரிவித்துள்ளது. பாஸ் கட்சியின் இஸ்லாமிய கொள்கைத் திட்டமான, அதன் நாடாளுமன்ற மசோதாவுக்கு பிகேஆர் ஆதரவு தரவில்லை என்பது முதாவது காரணமாகும்.

2). பாஸ் கட்சி தலைமைத்துவத்திற்கு எதிராக பிகேஆர் தாக்குதல் தொடுத்ததோடு மற்றும் பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கூறியது ஆகியவை அரசியல் ஒத்துழைப்பு உணர்வுக்கு முரணானது என்பது 2ஆவது காரணமாகும்.

3). கிளந்தானில் பாஸ் அரசாங்கத்தைக் கவிழ்க்க விரும்பியவர்களுடன் பிகேஆர் கைகோர்த்தது, சுங்கை பெசார்- கோலகங்சார் இடைத்தேர்தல்களில் பாஸ் கட்சிக்கு எதிராக நடந்து கொண்டது.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிர்வாக விவகாரங்கள் உள்பட் கட்சியெடுக்கும் எந்தவொரு அரசியல் முடிவும் பாஸ் கட்சியின் மத்திய நிர்வாக குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஆலோசனை மன்றச் செயலாளர் டத்தோ டாக்டர் நிக் முகமட் ஸவாவி கூறினார்.

No comments:

Post a Comment