இனிப்பு கலவையற்ற
புதிய 'கொக்கோ கோலா'அறிமுகம்
சர்க்கரை கலவை இல்லாத புதிய ‘கொக்கோ கோலா’ பானத்தை கொக்கோ கோலா மலேசியா நிறுவனம் இன்று அறிமுகம் செய்தது.
Coca-Cola Zero drink என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பானம் ஒரிஜினல் கொக்கோ கோலா சுவையை கொண்டிருக்கும் என கொக்கோ கோலா சிங்கப்பூர், மலேசியா, புருணை ஆகியவற்றுக்கான மார்க்கெட்டிங் இயக்குனர் Tish Condeno தெரிவித்தார்.
அதிகமான மக்கள் ஒரிஜினல் கொக்கோ கோலாவை அதிகம் விரும்புவர் என தெரியும். ஆனால் சீனியின் அளவை மறுபரிசீலவை செய்யா வேண்டியது அவசியமாகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Coca-Cola Zero Sugar இனிப்பு கலவை இல்லாவிட்டாலும் ஒரிஜினல் கொக்கோ கோலா சுவையை கொடுக்கும்.
மலேசியர்களிடையே காணபடும் இனிப்பு, கலோரி நுகர்வை கட்டுப்படுத்தும் வகையில் உருமாற்றம் நிறைந்த இனிப்பு கலவையற்ற கொக்கோ கோலா அறிமுகம் செய்யப்படுவதாக அவர் சொன்னார்.
இந்த புதிய கொக்கோ கோலா இம்மாதம் முதல் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment