9 கடற்படை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்பு!
குவாந்தான் -
செடிலி கடற்பகுதியில் தகவல் தொடர்பிலிருந்து விடுபட்டு மாயமான
கடற்படை படகும், அதில் ரோந்து பணியில் ஈடுபட்டுருந்த 9 கடற்படை அதிகாரிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அரச மலேசிய கடற்படை தளபதி டான்ஸ்ரீ அமாட் கமாருல்ஸமான் அமாட் படாருடின் அறிவித்தார்.
கடந்த வாரம் புதன்கிழமையிலிருந்து ரோந்து பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த கேடி பெர்டானா என்ற படகு
தகவல் தொடர்பிலிருந்து திடீரென காணாமல் போனது.
குவாந்தான்
கிழக்குகரையிலிருந்து
90 கடல் மைல்களுக்கு அப்பால் அரச மலேசிய ஆகாயப் படையின் ஹெலிகாப்டர்
காணாமல் போன படகையும் 9 அதிகாரிகளையும் கண்டுப்பிடித்தது.
பத்திரமாக
மீட்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரிகளும் நாளை காலை 9.00 மணியளவில் குவாந்தானை வந்தடைவர்.
இவ்வேளையில்
அதிகாரிகளை தேடும் பணியில் ஈடுபட்ட மலேசிய கடல்சார்
அமலாக்கத் துறையினர்,
சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேசியாவைச் சேர்ந்த மீணவர்கள்
ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொண்டார் கமாருல்ஸமான்.
No comments:
Post a Comment