5 பேர் விலகல்; வழக்கை தொடர்வது மூவர் மட்டுமே!
கோலாலம்பூர்-
மஇகா- சங்கப் பதிவகத்துக்கு
எதிராக 8 பேர் தொடுத்த வழக்கில் இருந்து ஐவர் அதிகாரப்பூர்வமாக
வெளியாகியுள்ளனர். இதனால் இந்த வழக்கை தொடுத்திருப்பவர்களின் எண்ணிக்கை
3ஆக குறைந்துள்ளது.
நேற்று
கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் போது ஐவர் விலகியுள்ளது உறுதிசெய்யப்பட்டது.
பத்து தொகுதி மஇகா தலைவர் ஏ.கே.இராமலிங்கம், டத்தோ ஹென்றி பெனடிக், டத்தோ எம்.வி.இராஜு, ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் பெர்னாண்டஸ், வி.கணேஷ், எம்.சத்தியமூர்த்தி,
ஆர்.எம்.பிரபு, ஆர்.சிதம்பரம் பிள்ளை ஆகியோர் வழக்கு தொடுத்த
8 பேர் ஆவர்.
இவர்களில்
வி.கணேஷ், ஜோர்ஜ்
அலெக்சாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, எம்.சத்தியமூர்த்தி,
ஆர்.சிதம்பரம் பிள்ளை ஆகியோர் நேற்றுடன் இவ்வழக்கிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர் ஏ.கே ராமலிங்கம் தெரிவித்தார்.
நான் உட்பட டத்தோ ஹென்றி பெனடிக்ட் ஆசீர்வாதம், டத்தோ எம்.வி.இராஜூ ஆகிய மூவர் மட்டுமே இனி இந்த வழக்கின்
மேல்முறையீட்டைத் தொடர்வர்.
மேலும், இதற்கு முன்
இந்த வழக்கில் வாதாடி வந்த வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டு வழக்கை தொடர்ந்து வரும் மூவரை
வழக்கறிஞர் டத்தோ வி.எம்.மனோகரன் பிரதிநிதிக்கிறார்.
நேற்று
நடைபெற்ற வழக்கின்போது மேல் முறையீடு செய்வதற்கு கூட்டரசு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மஇகாவும் சங்கப்
பதிவகமும் இணைந்து சதியாலோசனையில் ஈடுபட்டனர் என வழக்கு தொடரப்பட்டது.
உரிய ஆவணங்கள்
சமர்ப்பிக்கப்பட்டவுடன் மேல்முறையீட்டு விசாரணைக்கான தேதியை கூட்டரசு நீதிமன்றம் நிர்ணயிக்கும்.
No comments:
Post a Comment