Sunday, 7 May 2017

அஜெண்டா சூரியா கொமுனிகேஷனின் 15ஆவது இந்திய திருமண கண்காட்சி விழா

அஜெண்டா சூரியா கொமுனிகேஷனின்  

15ஆவது இந்திய திருமண கண்காட்சி விழா


கோலாலம்பூர்-
கண்காட்சி நிகழ்வுகளை நடத்துவதில் பெயர் பெற்ற அஜெண்டா சூரியா கொமுனிகேஷனின் இந்திய திருமண கண்காட்சி விழா அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது.

இம்மாதம் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை மிட்வேலி கண்காட்சி வளாகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி விழாவை மலேசியாவுக்கான இந்திய துணை தூதர் நிக்கிலேஷ் கிரி  தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அஜெண்டா சூரியா கொமுனிகேஷன் நிறிவனத்தின் தலைவர் ஜெகாராவ் சிம்மான்சா, 15 ஆண்டுகளுக்கு முன்பு கேஎல் சென்ட்ரலில் தீபாவளி கர்னிவல்  வெறு 40 முகப்பிடங்களை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்டது.


இன்று புக்கிட் ஜாலிலில் சுமார் 5 லட்சம் மக்களை கவர்ந்து  மலேசிய சாதனை புத்தகத்தில் பெய்ர் பதித்துள்ளது பெருமைக்குரியதாகும் என்றார்.

15ஆவது ஆண்டாக நடத்தப்படும் இந்திய திருமணக் கண்காட்சியோடு இந்திய பயண கண்காட்சியையும் அஜெண்டா சூரியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

அஜெண்டா சூரியா கொமுனிகேஷன் நிறுவனம் இந்தியாவுக்கான வாணிப வாய்ப்புகளை அதிகமாக்கியுள்ளதுடன்  இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலா பயணங்களை அதிகரித்துள்ளது என நிக்கிலேஷ் கிரி கூறினார்.

நேற்று முதல் நாளை 7ஆம் தேதி வரை இந்த  கண்காட்சிக்கு வருகை தரும் மக்களுக்காக போட்டிகள், கண்கவர் மேடை படைப்புகள், பரிசுப் பொருட்கள் என பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment