Wednesday, 3 May 2017

ஜிஇ14: பேராக்கில் மஇகாவுக்கு வெற்றி வாய்ப்பில்லையா?




ஈப்போ-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் களமிறக்கப்படும் மஇகா வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் இல்லையா? எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அண்மையில் கெடா, எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மஇகா தொகுதித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டறையை முடித்து வைத்து உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், ஜோகூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, மலாக்கா, பகாங், கெடா ஆகிய மாநிலங்கள் மஇகா வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பேராக் மாநிலத்தில் 2 நாடாளுமன்றத் தொகுதிகள், 4 சட்டமன்றத் தொகுதிகளை மஇகா கொண்டுள்ள நிலையில் அதனை பற்றி ஒரு கருத்தும் தெரிவிக்காதது பல்வேறு கேள்வியை எழுப்பியுள்ளது.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதிகளில் மஇகா வெற்றி பெறும் சூழல் இல்லை என்பதை டத்தோஸ்ரீ சுப்ரா உணர்ந்துள்ளாரா? அல்லது தேமு கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளுடன் தொகுதி பறிமாற்றம் செய்து கொள்ளப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட், தாப்பா ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளிலும் புந்தோங், ஜெலாப்பாங், ஊத்தான் மெலித்தாங் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. இதில் தாப்பா தொகுதியில் மட்டுமே மஇகா வெற்றி பெற்றது. இதில் பெராங் தொகுதி அம்னோவிடம் தொகுதி பறிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment