Thursday, 25 May 2017

Odyssey Academy attempting "MALAYSIAN BOOK OF RECORDS" title by gathering 66 students in one album



Jay, who is known as one of the leading music director in Malaysia and fame of the melodious song 'Uyirai Tholaithen' together with famous vocalist Preetha Prasad have successfully made their vision come true by producing 66 new music directors, singers, and lyricist through their very owned Odyssey vocal and music academy. In order to create a platform for their talented students, they kick started with Orange Box Studios Record label and eventually transformed the group of  students into a single platform to showcase their talent by creating an album entitled "Homemade Melodies".

Besides, this "Homemade Melodies" album comprises of 19 songs which has been composed, written and sung by the students itself. These 66 students divided themselves into several groups and tried a new attempt by coming out with the songs with their full effort to telecast their talent.

The founder of Orange Box Studios, Jay stated that these students are aiming to create an history in Malaysian Music industry besides attempting to go for the MALAYSIAN BOOK OF RECORDS as it is known as the first attempt in Malaysia where it consists of large number of composers working together in an album.




These students who undergone the intensive training for the past 8 months in Odyssey academy showcasing their talents and ensuring that they are well trained to expose themselves in the real music industry which encompasses important elements for instance sound engineering, song composition, lyrics writing and music instruments handling. It is also known that it is going to be the First Contemporary Training School in Malaysia to gather all of its students in one album.

In conjunction with that, press release will run concurrently with the students signing the contract with copyrights holder, Orange studios. The official audio and CD launch will take place as per the details stated below: 
Date    :  27th May 2017
Time    :  3pm to 5pm
Venue  : PJ Life Arts Center 3, PJ Live Arts Center 2A- 3, Block K, Jaya One, Section 13, No 72-A,                 Jalan Universiti, Petaling  Jaya .

Though nowadays audio launch is not being given that much of importance, yet this entire team put their full effort to organize the audio launch to celebrate their success and the audio launch is set to be witnessed by the public real soon. Thus, there would not be any admission fee charged. The CDs will be on sale for public purchase during the audio launch.


For further details and enquiries regarding the launch, public are advised to visit 'Odyssey Vocal & Music Training' https://www.facebook.com/odysseykl/  Facebook page.


Wednesday, 24 May 2017

ஒடிசி இசை பயிலரங்கு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறவுள்ளது!

ஒடிசி இசை பயிலரங்கு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறவுள்ளது!



நாட்டில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘உயிரை தொலைத்தேன்’ புகழ் இசையமைப்பாளர் ஜெய், பின்னணி பாடகி பிரித்தா பிரசாத் தங்களின் ஒடிசி இசைப் பயிலரங்கின் வழி 66 இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்களை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கான தளத்தை பதிப்பதற்காக ஆரஞ்சு பாக்ஸ் ரெக்கோர்ட்ஸ் தொடக்கி அதன் வழி “ஹோம்மெட் மெலோடிஸ்" எனும் இசைத் தொகுப்பை தயாரித்துள்ளனர்.

இந்த “ஹோம்மெட் மெலோடிஸ்" இசை தொகுப்பை ஒடிசியில் பயின்ற மாணவர்களைக் கொண்டு உருவாக்கியுள்ளனர். சுமார் 19 பாடல்கள் அடங்கிய இந்த இசை தொகுப்பை 66 இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து அவர்களை பல குழுக்களாக அமைத்து மாணவர்களை பாடல் வரிகளை எழுதி, பாடி, இசையமைத்துள்ளனர். 



நாட்டில் முதல் முறையாக இது போன்ற ஒரு இசை பயிற்சி பயிலரங்கு மாணவர்களைக் கொண்டு அவர்களின் திறமைக்கு வழிவிட்டு அவர்களது பாடல்களை தயாரித்து வெளியீடு செய்வதும் அதிகமான கலைஞர்களைக் கொண்டு ஒரு இசைத் தொகுப்பை உருவாக்குவதும் இந்த இசைத் தொகுப்பின் சிறப்பு அம்சமாகும்.

மேலும், அதிகமான இசைக் கலைஞர்களைக் கொண்டு முதன் முறையாக உருவாக்கப்படும் இசைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வை மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஆரஞ்சு பாக்ஸ் ரெக்கோர்ட்ஸ் லேபலின் தோற்றுநரும் இசையமைப்பாளருமான ஜெய் தெரிவித்தார்.

கடந்த 8 மாதங்களாக ஒடிசி இசை பயிலரங்கில் சமகால இசை பயிற்சியை பயின்ற மாணவர்களின் பயிற்சிகளை பரிசோதிக்கவும் அவர்களுடைய திறமையை சோதிக்கவும் இறுதிப் பயிற்சியாக சுயமாக பாடல் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் அவர்கள் இயற்றும் பாடல்கள் கிடப்பிலேயேயுள்ளன. ஆகையால், இதனை மாற்றியமைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு இம்முறை இப்பாடல்களை இசைத் தொகுப்பாக வெளியிட புதிய முயற்சியை செய்துள்ளதாக நாட்டின் முன்னணி இசையமைப்பாளர் ஜெய் கூறினார்.



இதன் வழி, ஒடிசி மாணவர்களின் திறமையை வெளிக்கொணரவும் அவர்களுக்கு தூண்டுதலை வழங்கவும் அவர்களின் பாடல்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இசைத் தொகுப்பாக வெளியிடப்படுகின்றன. இந்த இசைத் தொகுப்பில் பணிபுரிந்த மாணவர்கள் “ஹோம்மெட் மெலோடிஸ்" இசை தொகுப்பின் காப்புரிமைக்காக ஆரஞ்சு பாக்ஸ் ரெக்கோர்ட்ஸ் லேபலுடன் காப்புரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த இசைத் தொகுப்பு வருகின்ற மே 27ஆம் தேதி சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிஜே லைஃப் ஆர்ட்ஸ் மையத்தில் பிற்பகல் 3 முதல் 6 மணி வரையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு முற்றிலும் இலவசமாக நடைபெறுவதால் பொதுமக்கள் புதுமுக கலைஞர்களாகிய மாணவர்களின் முயற்சிக்கு ஆதரவை வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். ஏனென்றால், இந்த இசைத் தொகுப்பு அவர்களின் முதல் படைப்பாகும்.




இதனிடையே, இன்றைய கால கட்டத்தில் இசைத் தொகுப்பு வெளியீடு காணுவது மிகவும் குறைந்து வரும் வேளையில், அந்த குறையை நிறைவு செய்யும் வகையிலும் இந்த இசைத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இசைத் தொகுப்பு பொதுமக்களின் முன்னிலையில் வெளியீடு காணப்படவுள்ளது. இசைத் தொகுப்பை பொதுமக்கள் நேரடியாக வாங்கிக் கொள்ளலாம். 


இந்த இசைத் தொகுப்பு குறித்து மேல் விவரங்களுக்கு ‘Odyssey Vocal & Music Training’ https://www.facebook.com/odysseykl/ எனும் முகநூலில் வலம் வரலாம்.

Tuesday, 23 May 2017

சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் அன்னையர் தின விழா

சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின்
 அன்னையர் தின விழா


சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் அன்னையர் தின விழா அண்மையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இச்சங்கத்தின் உறுப்பினர்களின் தாய்மார்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இச்சங்கத்தின் ஆண்டு நிகழ்வுகளில் அன்னையர் தின ஒரு சிறப்பான நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. ஏனெனில் தாயாரின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அமையப்பெற்றுள்ள இந்நாளின் தாய்மார்களை கெளரவிப்பதை கடமையாகக் கொண்டுள்ளோம் என சங்கத்தின் தலைவர் வீ.சின்னராஜு தெரிவித்தார்.



இந்நிகழ்வில் சங்கத்தின் உறுப்பினர்களும் அவர்களின் தாய்மார்களும் கலந்து கொண்டனர்.

சமந்தாவுக்கு 'டும் டும் டும்'


தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜூனின் மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து வந்ததைத் தொடர்ந்து, இவர்களின் திருமணம் அக்டோபர் 6ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களின் திருமணம் கோவாவில் நடைபெறும் என்று வெளியான செய்தியை மறுத்து, ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாக நாக சைதன்யா உறுதி செய்துள்ளார்.

இரு வீட்டார் சம்மதத்துடன் ஜனவரி 29ஆம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவ்வாண்டுக்குள் இவர்களின் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியானது. அதுபோல் வரும் அக்டோபர் மாதம் நாக சைதன்யாவை கரம் பிடிக்கிறார் நடிகை சம்ந்தா.

"அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி மலேசியா"

"அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி மலேசியா"



நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'வேலைக்காரன்' படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடந்து முடிந்தது. 'இந்தப் படப்பிடிப்பிற்கு ஆதரவு வழங்கி வந்த மலேசிய இந்தியர்களுக்கு நன்றி' என குறிப்பிட்டுள்ளார்  நடிகர் சிவகார்த்திகேயன்.

படப்பிடிப்பு முடிந்தவுடன் மலேசியத் தமிழர்களை சந்தித்து உரையாடி சிவா, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்தப் படத்தின் இயக்குனர் மோகன் ராஜா கூறுகையில், எனக்கு பிடித்த மலேசியாவில் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு இது. 'வேலைக்காரன்' படத்திற்கான  படப்பிடிப்பு மலேசியாவில் முடிவடைந்துவிட்டது. மலேசிய தமிழர்களின் அன்புக்கும் வரவேற்புக்கும் வாழ்த்துகள் என டுவிட்டர் அகப்பக்கத்தில் பதிவு செய்தார்.

'எம். குமரன்  S/O மஹாலட்சுமி', 'தில்லாலங்கடி' என ஏற்கெனவே இரண்டு படங்களை மலேசியாவில் இயக்கி இருந்ததாக இயக்குனர் மோகன் ராஜா கூறினார்.

9 கடற்படை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்பு!

9 கடற்படை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்பு!



குவாந்தான் -
செடிலி கடற்பகுதியில் தகவல் தொடர்பிலிருந்து விடுபட்டு மாயமான கடற்படை படகும், அதில் ரோந்து பணியில் ஈடுபட்டுருந்த 9 கடற்படை அதிகாரிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று  அரச மலேசிய கடற்படை தளபதி டான்ஸ்ரீ அமாட் கமாருல்ஸமான் அமாட் படாருடின் அறிவித்தார்.

கடந்த வாரம் புதன்கிழமையிலிருந்து  ரோந்து பணிகள்  தீவிரமாக ஈடுபட்டு வந்த கேடி பெர்டானா என்ற படகு தகவல் தொடர்பிலிருந்து திடீரென காணாமல் போனது.

குவாந்தான் கிழக்குகரையிலிருந்து 90 கடல் மைல்களுக்கு அப்பால் அரச மலேசிய ஆகாயப் படையின் ஹெலிகாப்டர் காணாமல் போன படகையும் 9 அதிகாரிகளையும் கண்டுப்பிடித்தது.

பத்திரமாக மீட்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரிகளும் நாளை காலை 9.00 மணியளவில் குவாந்தானை வந்தடைவர்.

இவ்வேளையில் அதிகாரிகளை  தேடும் பணியில் ஈடுபட்ட  மலேசிய கடல்சார் அமலாக்கத் துறையினர், சிங்ப்பூர், வியட்நாம், இந்தோனேசியாவைச் சேர்ந்த மீணவர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொண்டார் கமாருல்ஸமான்.

Monday, 22 May 2017

Are You A Talented Singer?? Here's a Golden Opportunity For you!


'The Rhythms Mind (Singapore) and Orange Box Studio Malaysia are organising  'I-Sing Malaysia 2017' international level singing competition which is known as one the biggest singing competition. The main aim of this competition is to prepare a platform for the talented singers to showcase their talent.

It is known that there will be participants from 30 countries including Singapore, India, Nepal, Myanmar and many more. Besides, as mentioned by the organisers Michael Samy and Jay, Malaysia will be one of the participant in this singing competition.



This competition will be consists of two categories which are known as solo category and Duet song category.  Those who wished to participate in this competition are welcomed to chose either Tamil, Malay, English or Chinese songs as per their wish. All the judges of this competition will be well prepared to evaluate the songs from any of the languages chosen. The participants should be in the range of age between 16  to 65 years old. Both male and female are encouraged to grab this opportunity.



There will be an entrance fee charged towards all the registered participants. The organiser Michael stated that, there will be a difference in terms of the charges where students will be charged RM20, Rm30 for those register via online and  RM40 for the participants who register on the day of the audition.  

Furthermore, there will be few criterias considered in choosing the winners of the 'I-Sing Malaysia 2017' competition. The important criterias which will be taken into consideration are voice quality, melody, pitch, stage presence and talent showcase. The winner for the solo category will get the golden opportunity to take back home RM5,000.00 whereas for Duet category will be gifted RM 6,000.00.



There will be three winners  altogether, one from a solo category and two winners from duet song category respectively who will take part in the international singing competition will be held in Yangon, Myanmar on coming 29th September to 1st October. The winner of the international vocal competition will take back home 10,000 USD.

The audition for this singing competition will be held in several places. The places are Penang, Johor Bharu, Kuala Lumpur and Ipoh.

Listed below are the details of the audition:

* Penang
  Date    : 4.6.2017 (Sunday)
  Time   : 9.00am - 5.00pm
  Place  : YMCA, 211, Jalan
  Macalister, Georgetown,
  Pinang.

* Johor Bharu
  Date    : 10.6.2017 (Saturday)
  Time   : 9.00am - 5.00pm
  Place  : Tropical Inn, 15,
  Jalan Gereja, Bandar
  Johor Bharu, Johor.

* Kuala Lumpur
  Date   : 18.6.2017 (Sunday)
  Time  : 9.00am - 5.00pm
  Place : Odyssey Vocal and Music Training, 4, Wisma Ajenzi Riaz,  Jalan Tun Sambanthan, Brickfield, Kuala Lumpur.

* Ipoh
  Date    : 1.7.2017 (Saturday)
  Time   : 9.00am - 5.00pm
  Place  : MU hotel, 18, Jalan      Chung on Siew, Taman Jubilee, Ipoh, Perak.

Organizer Jay believes that ' I-Sing Malaysia competition will create a great platform for all the talented individuals to showcase their talents to the world. Thus, he requesting those with required talents not to miss to participate in this vocal competition.

For further details please log in to https://www.facebook.com/ISingMalaysia/ facebook page and visit http://i-singworld.com/registration-2017/ for registration

தேமு வேட்பாளராக யோகேந்திர பாலனே வேண்டும்! மக்கள் கோரிக்கை


சுங்கை சிப்புட்-
தினந்தோறும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் யார் வேட்பாளராக களமிறக்கப்படுவார்? என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

மஇகாவின் இரு தேசியத் தலைவர்கள் பதவி வகித்த இத்தொகுதியில் அந்த அந்தஸ்த்தில் உள்ளவர்களே மீண்டும் களமிறங்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வரும் வேளையில் மண்ணின் மைந்தருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கிறது.

துளசி

இந்நிலையில் இங்கு பிறந்து தலைநகரில் வர்த்தகம் மேற்கொண்டு வரும் தொழிலதிபர் யோகேந்திர பாலனே இம்முறை இத்தொகுதியின் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சுங்கை குருடா மக்கள்  தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுங்கை குருடா தோட்டத்தில் பிறந்து வளர்ந்த யோகேந்திர பாலன் தலைநகரில் சொந்த தொழில் மேற்கொண்டு வருகின்றார். ஆனாலும் இந்த தோட்டத்து மக்களை மறக்காமல் பல்வேறு உதவிகளை இன்றளவும் செய்து வருகிறார் என தோட்ட குடியிருப்புவாசிகளான பி.அந்தோணிசாமி, ஆர்.சுப்பிரமணியம், பி.ராமன், கே.மனோகரன், எஸ்.காளியப்பா, எஸ்.தனகராசு, திருமதி துளசி ஆகியோர் தெரிவித்தனர்.

பி.ராமன்

சுங்கை குருடா மக்களுக்கு மட்டுமின்றி சுங்கை சிப்புட் மக்களுக்கும் பல்வேறு வகையில் உதவிகளை புரிந்து வரும் யோகேந்திர பாலன் தேசிய முன்னணி வேட்பாளராக இங்கு களமிறக்க வேண்டும்.

ஆர்.சுப்பிரமணியம்

அவ்வாறு இங்கு யோகேந்திர பாலன் தேமு வேட்பாளராக களமிறக்கப்பட்டால் இன்னும் கூடுதலான சேவைகளை அவரால் புரிய முடியும். இது இங்குள்ள மக்களுக்கு கூடுதல் நன்மைகளை விளைவிக்கும்.



மண்ணின் மைந்தருக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டால்  அவரின் வெற்றியை நிச்சயம் உறுதி செய்ய முடியும் எனவும் எதிர்க்கட்சி வசமுள்ள இத்தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றுவதற்கு அடித்தளமாக அமையும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

'அன்வார் 7ஆவது பிரதமர்' பதாகை ஏந்திய தலைவர்கள்

'அன்வார் 7ஆவது பிரதமர்'பதாகை ஏந்திய தலைவர்கள்


ஷா ஆலம்-
'அன்வார் 7ஆவது பிரதமர்' என்ற பதாகையை ஏந்தி நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் யார்? என்ற கேள்விக்கு விடையளித்துள்ளனர் எதிர்க்கட்சித் தலைவர்கள்.

ஷா ஆலமில் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, உதவித் தலைவர்கள் ஆகியோர் 'அன்வார் 7ஆவது பிரதமர்' வாசகம் பதித்த பதாகையை ஏந்தியிருந்தனர்.

அவர்களோடு ஜசெகவின்  தலைவர் லிம் கிட் சியாங், பார்ட்டி அமானா நெகாரா தலைவர் முகமட் சாபு ஆகியோரும் இந்த பதாகையை ஏந்தியிருந்தனர்.

ஆனால் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரிபூமி பெர்சத்து மலேசியா  கட்சியின் (பெர்சத்து) அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர், தலைவர் முஹிடின் யாசின் ஆகியோர் இந்த பதாகையை ஏந்தவில்லை.

மாறாக மகாதீர் கூட்டத்தை படம் பிடித்துக் கொண்டிருந்தார். முஹிடின் புன்னகையுடன் கைத்தட்டி பாராட்டினார்.

Sunday, 21 May 2017

பொருளாதார முன்னேற்றம் தலைமைத்துவ விவேகத்தைக் காட்டுகிறது - டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன்

பொருளாதார முன்னேற்றம்
தலைமைத்துவ விவேகத்தைக் காட்டுகிறது
- டான்ஸ்ரீ  கென்னத் ஈஸ்வரன்

கோலாலம்பூர்-
உலக ரீதியில் பொருளாதார வீழ்ச்சி தலைதூக்கியிருந்தாலும், மலேசியா அத்தகைய இக்கட்டான சூழலிலிருந்து மாறுபட்டுச் செயல்படுகிறது என்பதை உறுதி செய்யும் வகையில், தற்போது மலேசியாவின் பொருளாதார அடைவுநிலை அமைந்துள்ளது என மைக்கிஎனப்படும் மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்கள் சம்மேளனத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கெ. கென்னத் ஈஸ்வரன் வர்ணித்துள்ளார்.

2017ஆம் ஆண்டின் காலாண்டு முடிவின்படி மலேசியா பொருளாதார ரீதியில் 5.6 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. 2016ஆம் ஆண்டின் காலாண்டில்  இந்த வளர்ச்சி விகிதம் 4.5 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பொருளாதார முன்னேற்றம் தலைமைத்துவத்தின் விவேகத்தையும் வணிகர்களுக்கு ஒரு சாதகமான அறிகுறியையும் காட்டுகிறது.

இவ்வேளையில் உருமாற்றத்திட்டத்தின் வழி பீடு நடைபோட்டு, பல இன்னல்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை உருமாற்றி அமைக்க துடிப்புடன் செயல்பட்டு வரும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவ செயல்திறனை மைக்கி பாராட்டுகிறது.

மலேசியாவின் இந்த ஆக்ககரமான செயல்பாடுகள் உலக ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இது ஆசியஐரோப்பிய நாடுகளிடையேயான பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் மலேசியா தனித்துச் செயல்படுவதைக் காட்டுகிறது.

தற்போது பிரதமரின் செயல்திட்டங்கள் அனைத்தும் தூரநோக்குச் சிந்தனையுடனும், எல்லாச் சமூகத்தினருக்கும் பயனளிக்கும் வகையிலும் இருப்பதால், நாம் அனைவரும் இத்தருணத்தில் ஒன்றிணைந்து, ஒரே குடையின் கீழ் செயல்பட்டு பிரதமருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என  டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் வர்த்தகர்களைக் கேட்டுக்கொண்டார்.

Saturday, 20 May 2017

'செடிக்' சீரமைப்பு: தலைமை இயக்குனராக என்.எஸ்.இராஜேந்திரன் நியமனம்

'செடிக்' சீரமைப்பு: தலைமை இயக்குனராக
என்
.எஸ்.இராஜேந்திரன் நியமனம்


புத்ராஜெயா-
ண்மையில் அறிவிக்கப்பட்ட இந்தியர் வியூக வரைவு செயல் திட்ட (புளூபிரிண்ட்அமலாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக 'செடிக்' அமைப்பு முற்றிலுமாக சீரமைக்கப்படுகிறது.

இந்த மறுசீரமைப்பின் கீழ்  எஸ்ஐடிஎஃப் (SITF ), சீட் எனப்படும் இந்திய ர்வர்த்தக வளர்ச்சி திட்ட செயலகம் (SEED), தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு செயல்வரைவு திட்டம் அமைப்பு (PTST) ஆகிய மூன்று அமைப்புகளும் செடிக் அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கப்படவுள்ளன.

சீரமைக்கப்பட்ட அமைப்பின் தலைமை இயக்குனராக  பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ்.இராஜேந்திரன் நியமனம் செய்யப்படுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஒப்புதல் வழங்கியுள்ளார். இவரின் பணி இம்மாதம் 22ஆம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கிறது.

இந்த அமைப்பின் கீழ் 6 பிரிவுகள் உருவாக்கப்படவுள்ளன.
1). கல்வி, இளைஞர் மேம்பாடு.
2).  பொருளாதாரம், வருமானம் மேம்பாடு.
3). சமூக நலன், சமூக மேம்பாடு.
4). அடையாள ஆவணங்கள் ஒருங்கிணைப்பு.
5). ஆய்வு, சிறப்பு அமலாக்கம்.
6).  சிறப்பு திட்டங்கள்.

இந்த பிரிவுகளின் செயல் திட்டங்களை விரிவாக்கவும் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை அமர்த்தவும் சீரமைப்பு வழிவகுக்கிறது.

மேலும் இந்திய சமுதாயம் தொடர்பான அமைச்சரவைக் குழுவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் சுகாதார அமைச்சரும் மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் 'செடிக்' அமைப்பின் அமலாக்க மேற்பார்வையாளராக பதவி வகிப்பார் என பிரதமர் துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை: மலேசிய குடியுரிமை இயல்பாகவே ரத்தாகும்


இரட்டை குடியுரிமை: மலேசிய குடியுரிமை இயல்பாகவே ரத்தாகும்!



ஜோகூர் பாரு-
இரு நாடுகளின் குடியுரிமையை கொண்டிருக்கும் மலேசியர்கள் தங்களது மலேசியக் குடியுரிமையை தானாக இழந்து விடுவர் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

மலேசியர்களின் குடியுரிமை இயல்பாகவே ரத்து செய்யப்படுவதற்கு மலேசிய  அரசியலமைப்பு அனுமதிக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை சட்டமன்ற உறுப்பினர் அந்தஸ்த்தை இழந்த புஜுட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திங் தியோங் சோன் விவகாரம் குறித்து கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

இது வெறும் அரசியல் சார்ந்தது அல்ல. மாறாக நாட்டின் கோட்பாடுகளை உள்ளடக்கிய விவகாரம் ஆகும்.

சரவாக் மாநில சட்டமன்றத்தின் இம்முடிவை எதிர்த்து சம்பந்தப்பட்ட கட்சியினர் நீதிமன்ற நடவடிக்கையை நாடலாம் என அவர் விவரித்தார்.

நஜிப் முன்னிலையில் தயாரிப்பாளரை அறைந்த நடிகர்

நஜிப் முன்னிலையில்தயாரிப்பாளரை அறைந்த நடிகர்!

பெட்டாலிங் ஜெயா-
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் முன்னிலையில் திரைப்படத்துறையைச் சேர்ந்த இரு கலைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்றிரவு இங்குள்ள புத்ரா ஜெயாவில் பிரதமர் முன்னிலையில் திரைத்துறை சார்பில் தேசிய உருமாற்றம் 2050(TN50) விவாதம் நடைபெற்றது.

இதில் புகழ்பெற்ற நடிகர் சுலைமான் யாசின் ,மெட்ரோவெல்ட் பிக்சர்ஸ் தயாரிப்பாளரின் செயல் முறை அதிகாரியுமான டேவிட் தியோவுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

நிகழ்வு   மதிப்பீட்டாளர் ரோஷாம் நோரை தியோ விமர்சித்தபோது, திடீரென உள்ளே நுழைந்த சுலைமான் அவரை அறைந்தார்.

அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தியோ, சுலைமானை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டதோடு பின்னர் மீண்டும் இவ்விவாதம் சகஜநிலைக்கு திரும்பியது.


வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மகளிருக்கு வெ. 12.1 மில்லியன் நிதியுதவி

வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மகளிருக்கு வெ. 12.1 மில்லியன் நிதியுதவி



சுங்கை சிப்புட்-
'சீட்' செயலகத்தின் மூலம் 30,366  இந்திய வர்த்தகர்களுக்கு இதுவரை 13 கோடி வெள்ளி வர்த்தக கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ  ஸம்ரி அப்துல் காதீர் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள இந்திய சமுதாயம் முன்னேற்றம் காணும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட வர்த்தக கடனுதவி வழி பலர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளனர்.

தெக்குன் நேஷனல் மூலம் நாடு தழுவிய நிலையில் 19, 342 வர்த்தகர்களுக்கு 2257.20 மில்லியன் வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 3,005 பேருக்கு 36 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுளளது.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 411 இந்திய வர்த்தகர்களுக்கு 6.6 மில்லியன் வெள்ளி  வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அமானா இக்தியார் மலேசியா கடனுதவி மூலம் நாடு தழுவிய அளவில் 9,455 மகளிருக்கு 123 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.

அதில் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 3,237 மகளிருக்கு 56.8 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 2,069 மகளிருக்கு 12.1 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது என நேற்று இங்கு நடைபெற்ற மக்கள் நல மேம்பாட்டு சந்திப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ ஸம்ரி இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் சிறப்பாக ஈடுபட்டு வரும் மகளிருக்கு சிறப்பு நிதியுதவிக்கான காசோலையை டத்தோஸ்ரீ ஸம்ரி எடுத்து வழங்கினார்.

Wednesday, 17 May 2017

வனிஜாவின் உறவினர்கள் எங்கே?

வனிஜாவின் உறவினர்கள் எங்கே?


கிள்ளான்-
உடல் நலக்குறைவு காரணமாக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  திருமதி வனிஜா முனியாண்டி எனும்  மாது கடந்த 13ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார்.

ஈப்போவை பூர்வீகமாகக் கொண்ட இவர், சில காலமாக போர்ட் கிள்ளான், பண்டமாரானில் வசித்து வந்தார்.

கிள்ளான் மருத்துவமனையில் உயிரிழந்த வனிஜாவின் உடலை  உறவினர்கள்  யாரேனும் பெற்று கொள்ளுமாறு சிலாங்கூர் இந்திய சமூக நலன் மரண சகாய இயக்கத்தின் தலைவர் தட்சணாமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

வரும் 19ஆம் தேதிக்குள் வனிஜாவின் உடலை  உடன் பிறந்தோர் அல்லது உறவினர்கள் யாரேனும் பெற்று கொள்ளவில்லை என்றால் இந்த இயக்கமே இவரின் உடலை நல்லடக்கம் செய்யும் என்றார் அவர்.

இதன் தொடர்பான மேல் விவரங்களை பெற 012-6700762 அல்லது 017-646933 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.