Wednesday, 7 April 2021

'I-SEED' திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் கணபதிராவ்

 ரா. தங்கமணி 

ஷா ஆலம்-

சிலாங்கூர் மாநிலத்தில் வர்த்தகம் மேற்கொள்ளும் சிறு வணிகர்கள், வர்த்தகர்களுக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் மாநில அரசு 'ஐ-சீட்' (I-SEED) திட்டத்தை தொடங்கியுள்ளது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் இன்று அத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

10 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் சிலாங்கூர் மாநிலத்தில் வர்த்தகம் மேற்கோள்வோர் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்தி கொள்ள வழிகாட்டுகிறது.

இத்திட்டத்தில் பதிந்து கொள்வோருக்கு வேண்டிய வர்த்தகப் பொருட்களை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கப்படுவோர் நேர்காணல் செய்யப்பட்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே பொருளுதவிகள் வழங்கப்படும்.

வரும் ஜூலை,ஆகஸ்ட் மாதங்களுக்குள் தகுதி வாய்ந்தவர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று கூறிய கணபதிராவ், 6 அதிகாரிகளைக் கொண்டு 'I-SEED' பிரிவு செயல்படுத்தப்படுகிறது என்று சொன்னார்.

இன்று நடைபெற்ற அதிகாரப்பூர்வ தொடக்க நிகழ்வில்  MBI. தலைமைச் செயல் அதிகாரி ஹஜா நோரித்தா,  I-SEED தலைமை ஒருங்கிணைப்பாளர் டிக்காம் லூர்டஸ், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் திருமதி கண்மணி, தினேஷ், குகநாதன், கமலநாதன், திருமதி விக்னேஷ்,  இந்திய கிராமத் தலைவர்கள் (KKI), ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment