கோ.பத்மஜோதி
கிள்ளான்,
மஇகாவின் பாரம்பரிய தொகுதியான கேமரன் மலை தொகுதி அம்னோவுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதே தவிர மஇகா அதனை ஒருபோதும் இழந்து விடவில்லை என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
கேமரன் மலை தொகுதி தற்போது அம்னோவிற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதே தவிர அத்தொகுதியை நிரந்திரமாக இழந்துவிடவில்லை; இழக்கவும் மாட்டோம்.
கேமரன் மலை தொகுதி மஇகாவின் பாரம்பரிய தொகுதியாகும். மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ சி.சிவராஜ் கடந்த 14ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கேமரன் மலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆயினும் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் சிவராஜ் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழந்ததோடு அங்கு இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.
அந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் எண்ணிக்கையை நாடாளுமன்றத்தில் அதிகரிக்கும் நோக்கில் அம்னோ கேட்டுக் கொண்டதற்கிணங்க மஇகா அத்தொகுதியை அவர்களுக்கு தாரை வார்த்துள்ளதே தவிர அதனை மஇகா ஒருபோதும் இழந்து விடாது என்று மஇகா 74ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment