கோலாலம்பூர்-
கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு பின்னாள் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் சம்பந்தப்பட்டுள்ளார் என்று பினாங்கு மாநில இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி குற்றஞ்சாட்டினார்.
பிரதமர் பதவியிலிந்து துன் மகாதீர் விலகியதே பக்காத்தான் ஹராப்பான் வீழ்ச்சிக்கு முதன்மை காரணமாகும் என்றமவர் குறிப்பிட்டார்.
மகாதீர் அதை ஒரு உள்நோக்கத்துடன் தான் செய்தார். பிரதமர் பதவியை அன்வாருக்கு வழங்கக்கூடாது என்ற எண்ணம் மகாதீருக்கு இருந்தது. பதவி நெருக்கடியின்போதும் மகாதீர் பதவி விலகி அன்வாருக்கு வழி வகுத்திருந்தால் பக்காத்தான் ஹராப்பான் இன்னமும் ஆளூம் அரசாங்கமாக இருந்திருக்கும்.
காணொளியாக பார்க்க:
22 மாதங்கள் மட்டுமே ஆளும் அரசாங்கமாக இருந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கவிழ்க்கப்பட்டு அதற்கு பதிலாக பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாஙம் அமைந்தது.
பிரதமர் பதவி அதிகார பரிமாற்றம் விவகாரம் பக்காத்தான் ஹராப்பானில் வெளிப்படையான ஒரு மோதலை ஏற்படுத்தியது. இது அன்வார் ஆதரவாளர்களுக்கும் அப்போது பெர்சத்து கட்சியின் தலைவராக இருந்த மகாதீர் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதலாக உருவெடுத்தது.
அன்வாரின் ஆதரவாளர்கள் அதிகார மாற்றத்தை விரைவுப்படுத்த விரும்பினர். மேலும் மாற்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட தேதியை வழங்குமாறு மகாதீருக்கு அழுத்தம் கொடுத்தனர்.அதே வேளையில் லங்காவி எம்.பி.யுமான மகாதீரின் ஆதரவாளர்கள் அவர் தனது பதவிக் காலம் வரை பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விரும்பினர்.
இறுதியாக புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக அம்னோ, பாஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற பெர்சத்து பக்காத்தான் ஹராப்பானில் இருந்து விலகிய மகாதீர் தனது பதவியை ராஜினாமா செய்ததும் பக்காத்தான் ஹராப்பான் கவிழ்ந்தது.
இதற்கிடையே, பிஎச் கூட்டணி வீழ்ச்சிக்கு அன்வாரே காரணம் என சொல்லப்படுவதை நிராகரித்த இராமசாமி, அஸ்மின் அலி பிகேஆரை விட்டு விலகியது போன்ற பல காரணங்களும் உள்ளன. முஹிடின் மகாதீரை முதுகில் குத்தினார். மற்றவர்கள் இதை பற்றி விவாதிக்க துணியவில்லை.
ஆனால், PH இன் வீழ்ச்சிக்கு மகாதீர் இன்னும் முக்கிய காரணம் என்று என்னால் சொல்ல முடியும்.
"மற்றவர்கள் அல்ல, அன்வார் அல்ல, குவான் எங் அல்லது மாட் சாபு அல்ல. காரணம் மகாதீர்.
"நாங்கள் அவரை நம்பி ஏமாந்தோம், மகாதீர் எங்களுக்கு துரோகம் இழைத்தார்," என்று 2020இல் நிகழ்ந்த நாட்டின் அரசியல் நெருக்கடி குறித்த கலந்துரையாடல் ஒன்றில் பிறை சட்டமன்ற உறுப்பினரான பேராசிரியர் இராமசாமி இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment