கோலாலம்பூர்-
மலேசிய இந்தியர்கள் சமூக- பொருளாதார மேம்படுத்தும் வகையில் ‘மலேசிய இந்தியர் திட்டவரைவு’ (Malaysian Indian Blueprint) மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமட் சித்திக் தெரிவித்தார்.
பி40 பிரிவைச்
சேர்ந்த இந்தியர்களை உள்ளடக்கி மனித மூலதனம், தொழில்முனைவோர் மேம்பாடு, சமூக நலன் திட்டங்கள்
ஆகிய மூன்று கூறுகளை உள்ளடக்கி இத்திட்டம் மேம்படுத்தப்படும்,
மலேசிய இந்தியர்
திட்டவரைவு 2017இல் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அதன் இலக்கை முழுமையாக அடையவில்லை.
மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவான ‘மித்ரா’ மூலம் அதனை மேம்படுத்தும் நடவடிக்கை
துரிதப்படுத்தப்படும்.
மித்ராவுக்கென
ஆண்டுதோறும் 100 மில்லியன் வெள்ளி நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்கிறது. அதன் மூலம்
இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
மலேசிய இந்தியர்களுக்கான
திட்டவரைவை முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாம் 2017இல் அறிமுகம் செய்து வைத்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment