சென்னை-
நெஞ்சுவலி காரணமாக மரணமடைந்த நடிகர் விவேக்கின் நல்லுடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணியளவில் மரணமடைந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில் நடிகர் விவேக்கின் நல்லுடலுக்கு திரைபிரபலங்கள் உட்பட பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment