கோ.பத்மஜோதி
கிள்ளான் -
தேசிய முன்னணியின் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கான ஆதரவு தொடரும் என்ற மஇகாவின் கூற்றில் பெருமிதம் கொள்வதாக பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய சூழலில் நிலைத்தன்மையற்ற அரசியல் போக்கு நிலவுகிறது. இருந்தபோதிலும் நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றும் போக்கு வரவேற்கத்தக்கதாகும்.
பெர்சத்துவுடனான உறவை முறித்துக் கொள்வதாக தேமுவின் முதன்மை கட்சியான அம்னோ முடிவு எடுத்துள்ள போதிலும் மஇகாவின் ஆதரவு தமது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு பலமாக அமைந்துள்ளதோடு இந்த ஆதரவு என்றும் தொடரப்பட வேண்டும் என்று மஇகாவின் 74ஆவது பொதுப் பேரவையில் இயங்கலை வழி சிறப்புரையாற்றிய டான்ஶ்ரீ முஹிடின் யாசின் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment