கோலாலம்பூர்-
நடப்பு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அம்னோ உறுப்பினர்கள் அமைச்சரவையிலிருந்து பதவி விலகினால் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கவிழும் என்று ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
பெர்சத்து கட்சியுடனான உறவை துண்டித்துக் கொள்வதாக அம்னோ பேரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கேற்ப அம்னோ அமைச்சர்கள் பதவி விலகலாம் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அம்னோ அமைச்சர்கள் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் முஹிடின் யாசின் கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த லிம், அரசாங்கம் கவிழக்கூடும் என்பதாலேயே அம்னோ அமைச்சர்கள் பதவி விலக வேண்டியதில்லை என்று முஹிடின் அறிவுறுத்தியுள்ளதாக மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment