ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
மலேசிய திரைப்பட
ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘பரமபதம்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரையீடு
காணவுள்ளது.
மலேசிய கலைத்துறையில் வளர்ந்து வரும் இயக்குனர்களான
விக்னேஷ் பிரபு- தனேஷ் பிரபு ஆகியோர் இணைந்து
இயக்கியுள்ள ‘பரமபதம்’ திரைப்படம் எப்போது திரையீடு காணும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
மலேசிய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ‘பரமபதம்’ விளையாட்டை மையப்படுத்தி பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், திரையீடு காண்பதற்கு முன்னரே உலகளாவிய நிலையில் பல விருதுகளை வாரி குவித்துள்ளது.
வரும் 29ஆம் தேதி
மலேசிய திரையரங்குகள் மட்டுமின்றி சிங்கப்பூரிலும் இலங்கையிலும் இத்திரைப்படம் வெளியீடு
காண்கிறது என்று படத்தின் இயக்குனர் விக்னேஷ் பிரபு தெரிவித்தார்.
பரமபதம் திரைப்படத்தில்
தனேஷ் பிரபு, சசிவரூபன், ரிஷி, பவித்ரன் ஆகிய நான்கு இளைஞர்கள் முதன்மை கதாபாத்திரத்தில்
நடித்துள்ளனர், இயக்குனர் விக்னேஷ் பிரபு மிரட்டும் வில்லனாக தனது நடிப்பை வழங்கியுள்ளார்.
நாயகியாக கெளசல்யா எனும் புதுமுகம் அறிமுகம் ஆகிறார். துணை கதாபாத்திரத்தில் கே.எஸ்.மணியம்,
பென் ஜி, கவிமாறன், அகோதரன், விமல், விக்கி நடராஜா, சிங்கை ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கெடா, பினாங்கு,
ஆகிய மாநிலங்களில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை சாய் நந்தினி மூவி வேல்ர்டு-
டீரிம் சாய் ஹோம் புரொட்க்ஷன் சார்பில் டாக்டர் இலட்சப் பிரபு, டாக்டர் சக்கரவர்த்தி
ஆகியோர் தயாரித்துள்ளனர்.
No comments:
Post a Comment