லிங்கா
சுங்கை சிப்புட்-
மூன்று மாடிகளைக் கொண்ட புதிய
கட்டடத்தை சுங்கை சிப்புட் மஇகா சொந்தமாக்கியுள்ளது.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ
எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் இங்குள்ள எம்எச் ஹோட்டல் வளாகத்தில் உள்ள மூன்று மாடி
கட்டடம் வெ.11 லட்சம் வெள்ளி செலவில் வாங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய டான்ஶ்ரீ
விக்னேஸ்வரன்,சுங்கை சிப்புட் மஇகா தற்போதுள்ள
தேசிய முன்னணி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இது தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பில்
முதன்மை சாலையிலிருந்து சற்று உள்ளே இருப்பதால் அது மக்களுக்கு சிரமமாக இருப்பதை உணர்ந்துள்ளோம்.
அதன் அடிப்படையிலேயே மக்களுக்கு
இலகுவாக இருக்க வேண்டும் என்பதால் இந்த கட்டடம் மஇகாவுக்கு வாங்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தின் மதிப்பு வெ.15
லட்சம் ஆகும். டான்ஶ்ரீ கோ.இராஜு மேற்கொண்ட நடவடிக்கையில் 11 லட்சம் வெள்ளி மதிப்பில்
இக்கட்டடம் சொந்தமாக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.
கூடிய விரைவில் இந்த புதிய கட்டடத்தில்
சுங்கை சிப்புட் மஇகா செயல்படும் என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இன்று இந்த புதிய கட்டடத்தின் சாவியை டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் பெற்றுக் கொண்டார். இந்நிகவில் டான்ஶ்ரீ இராஜு, டிஎன்பி வாரிய இயக்குனர் டத்தோ ரவிசந்திரன், கோலகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினர் நேருஜி, கெடா மாநில மஇகா முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment