கோலாலம்பூர்-
மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைமையில் இந்திய வர்த்தகச் சங்கங்கள் நேற்று டி.என்.பி நிறுவனத்துடன் சந்திப்பு நடத்தினர்.
முன்னதாக மலேசிய இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, டி.என்.பி நிறுவனம் வர்த்தகர்களுக்குச் சில சலுகைகளை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை டி.என் பி வாரிய இயக்குனர் டத்தோ ரவிச்சந்திரனிடம் மைக்கி முன்வைத்தாக மைக்கியின் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று டத்தோ ரவிச்சந்திரன் தலைமையில் டி.என்.பி.யின் சி.ஆர்.ஓ அதிகாரி டத்தோ மெகாட் ஜலாலுதீன் பின் மெகாட் ஹசானுடன் மைக்கி சந்திப்பு நடத்தியது.
இந்தச் சந்திப்பில் மைக்கியின் பொதுச்செயாலாளர் டத்தோ ஏ.டி குமாரராஜா, பிரிமாஸ் தலைவர் தி. முத்துசாமி, பிரேஸ்மா துணைத் தலைவர் டத்தோ மோஹசின் மற்றும் கோலாலம்பூர் டி.என்.பி தலைமை அதிகாரி ஏ. சிவனாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Advertisement |
இந்தப் பேச்சுவார்த்தையின் வாயிலாக இந்திய வியாபாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி, டத்தோ ரவிச்சந்திரனின் முயற்சியில் தீபாவளியை முன்னிட்டு கிடைத்துள்ளது.
டி.என்.பியின் பாக்கி நிலுவைக் கடனைஅதிகமாக வைத்துள்ள வியாபாரிகள், 6 மாதம் முதல் 2 வருட காலகட்டத்தில் தவணை முறையில் செலுத்த டி.என்.பி. நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது .
இந்தச் சலுகை, பாக்கி கடனுக்கு மட்டுமே. அந்தந்த மாதக் கட்டணத்தை முறையாக வியாபரிகள் மாதம் தோறும் செலுத்த வேண்டும்.
அதோடு இந்தச் சலுகை, மாநில வர்த்தகச் சம்மேளனம் மற்றும் இந்திய வர்த்தகச் சங்கங்களான மிம்தா, மிண்டாஸ், பிரிமாஸ், பிரஸ்மா, மீதா, மிக்ஜா இன்னும் சில வர்த்தகச் சங்கங்களின் வாயிலாகக் கோரிக்கை வைக்கும் வியாபாரிகளுக்கு வழங்கப்படுவதாக, மைக்கியின் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி குமராராஜா தெரிவித்தார்.
வியாபாரிகள் மாநில வர்த்தகச் சம்மேளனம், அந்தந்த வர்ததகச் சங்கங்கள் வாயிலாக அணுக, இதற்கான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அதோடு சங்கத்தின் வாயிலாக வரும் கோரிக்கை பாரங்களை மைக்கி பரிசீலனை செய்து, இந்தச் சலுகையைப் பெற்றுத் தரும் என டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா தெரிவித்தார்.
இவ்வேளையில், இந்தப் பிரச்னைக்கு உடனடி தீர்வு கண்ட டத்தோ ரவிச்சந்திரனுக்கு, மைக்கி நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதாக டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா தெரிவித்தார்!
No comments:
Post a Comment