ரா.தங்கமணி
ஈப்போ-
தமிழால் நாம் இயக்கத்தின் முயற்சியில் புந்தோங் வட்டாரத்தைச் சேர்ந்த காந்தன் த/பெ செயமணியத்திற்குச் சுயத்தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இளம் வயதிலேயே முதுகுத் தண்டு பிரச்சனையால் நடக்க முடியாமல் சில ஆண்டுகளுக்கு முன் தனது இடது காலையும் இழந்தார் காந்தன். ஆயினும் தன் விடாமுயற்சியாலும் பல நல்லுள்ளங்களின் உதவியாலும் தனது கைவினைப் பொருட்களை ஈப்போ சுற்றுவட்டாரத்தில் பண்டிகை விழாக் காலங்களில் விற்று தன் வாழ்வுக்கு பொருளாதாரம் ஈட்டி வந்தார்.
இருப்பினும் தற்போது சுகாதாரப் பிரச்சனைகளை எதிர் நோக்கி உள்ள அவர் தனது சுயத்தொழிலை மேற்கொள்ள
முடியாமல் போனதாகவும், கோறனி நச்சுப் பரவாலால் நாட்டில் அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு
ஆணையாலும் தனது அன்றாட
வாழ்க்கைச் சுமை இன்னும் அதிகரித்துள்ளதாகவும் அதனால் தனது பொருளாதாரம் தடைக்
பட்டுள்ளாதாகவும் தன்னிடம் தெரிவித்தார் என்று "தமிழால் நாம்" இயக்க ஒருங்கிணைப்பாளரான ரா.கதிரவன் தெரிவித்தார்.
முருகன் மாரிமுத்து |
தற்போது
அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினங்களைச் சமாளிக்க சமூகநலத் துறை வழங்கும் உதவித்
தொகை மருத்துவச் செலவுக்கேப் போதாத நிலையில், தனக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட்டால்,
தனது சுயத் தொழிலை மீண்டும் தொடர்வேன் என்று தன்னம்பிக்கையுடன் "தமிழால் நாம்" இயக்கத்தினரை அனுகிய காந்தன் தெரிவித்தார். அவருக்கு நம்பிக்கை
ஒளியை விதைக்கும் வகையில் தனது இயக்க உதவியுடன்
நன்கொடை வசூலிக்கப்பட்டு, கைவினை
பொருட்கள் தயாரிக்க வெ.1200
மதிப்புள்ள அச்சுக் கருவிகள், சில
உபகரணங்களும் வழங்கியதாக முருகன்
மாரிமுத்து விவாரித்தார்.
கதிரவன் ராஜா |
"தமிழால்
நாம்' புலனக்குழுத் தொடங்கப்பட்டு
இரண்டு மாதமே ஆன போதிலும்
அது சமுதாயச் சிந்தனைகளுடன் செயல்பட்டு வருகிறது என்றும், கடந்த செப்டம்பர் 27-ஆம் திகதி
" மக்கள் தொகை இயக்கம்" நடத்திய
இயங்கலை மூலம் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதையும், தொடர்ந்து பல செயல் திட்டங்கள்
தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழர்
வாழ்வுக்குக்காவும் திட்டமிடப் பட்டுள்ளதாகவும், தகுந்த நேரத்தில் அவை செயல் வடிவம்
பெறும் எனவும் இயக்கப் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஒரு
கை ஓசை எழுப்பாது என்ற
கருத்துக்கேற்ப எம் தமிழ் மக்கள்
கரம் கோர்த்து இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மேலும் இயக்கத்தின்
நிர்வாக அமைப்பினர் கேட்டுக் கொண்டனர்.
No comments:
Post a Comment