ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட்
நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கி பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மஇகாவின்
தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு மடிக்கணினிகளை
வழங்கினார்.
கோவிட்-19 வைரஸ்
பெருந்தொற்றின் காரணமாக உயர்கல்விக்கூடங்கள் மூடப்பட்டு இணையம் வாயிலாக கல்வி போதனாமுறைகள்
நடத்தப்படுகின்றன.
இந்நிலையில்
இங்கு பி40 பிரிவு குடும்பத்தைச் சேர்ந்த உயர்கல்வி மாணவர்கள் இணையம் வழி கல்வி பயில
போதிய உபகரணங்கள் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.
இவ்விவகாரம்
டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட சூழலில் 30 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை
வழங்குவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டார்.
அவ்வகையில்
இன்று இங்குள்ள தேசிய முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 30 மாணவர்களுக்கும்
மடிக்கணினிகளை டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வழங்கினார்.
No comments:
Post a Comment