ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
அண்மையில் அறிவிக்கப்பட்ட
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில்
(பட்ஜெட்) தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் ஒதுக்கீடு
செய்யப்படாதது இந்திய சமுதாயத்தில் அதிருப்தி அலை ஏற்படுத்தியுள்ளதை நன்கு அறிவேன்.
ஆனால் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 பில்லியன் வெள்ளியில் தமிழ்ப்பள்ளிகளுக்கு
நிச்சயம் மானியம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஸஃப்ருல்
தெங்கு அப்துல் அஸிஸ் வாக்குறுதி வழங்கியுள்ளார் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன்
தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டு
வரவு செலவுத் திட்டத்தில் இருந்து தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன் வெள்ளி மானியம்
ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளது. அப்போது அந்நிதி ஒதுக்கப்பட்டதில் தம்முடைய பங்கும்
இருந்தது
ஆனால் 2021க்கான
பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் ஒதுக்கப்படாதது குறித்து அரசியல் சர்ச்சை
ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ள
நிலையில் தாமும் நிதியமைச்சரிடம் இவ்விவகாரம் தொடர்பில் முறையிட்டுள்ளேன்.
Advertisement |
புதிய பட்ஜெட்டில் தேசியப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளி என்று பாகுபாடு பிரிக்காமல் அனைத்துப் பள்ளிகளையும் ஒன்றிணைத்து 50 பில்லியன் வெள்ளி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் நிச்சயம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்.
கூடிய விரைவில்
தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் தொடர்பில் நிதியமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார். அதுவரை
இந்திய சமுதாயம் அமைதி காக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ சரவணன் வெளியிட்டுள்ள காணொளியில்
குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment