ரா.தங்கமணி
கிள்ளான் -
தீபாவளி பெருநாளை முன்னிட்டு கோத்தாரா நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு இந்திய கிராமத் தலைவர் தேவன் வெள்ளையன் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை வழங்கினார்.
கோவிட்- 19 வைரஸ் தொற்று பாதிப்பால் பெரும் பொருளாதார நெருக்கடிடை எதிர்கொண்டுள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் இந்த மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் ஏற்பாட்டில் கிராமத் தலைவருக்கு வழங்கப்பட்ட 80 பொட்டலங்களும் தனது முயற்சியில் 45 பொட்டலங்களும் சேர்த்து 115 குடும்பங்களுக்கு இந்த பொட்டலங்கள் வழங்கப்பட்டன என்று தேவன் குறிப்பிட்டார்.
Advertisement |
கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் சுந்தரம் முன்னிலையில் பி40 பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு இந்த உதவிப் பொட்டங்கள் வழங்கப்பட்டன.
தீபாவளி பெருநாள் கொண்டாட்டங்களில் பி40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களுக்கு உதவிப் பொட்டலங்களை வழங்க முன்வந்த சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி, கணபதிராவ் ஆகியோருக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment