ரா.தங்கமணி
தெலுக் இந்தான் -
வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியை ஜசெகவிடமிருந்து தேசிய முன்னனி மீட்டெடுக்கும். அதற்கான களப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மஇகா இளைஞர் பிரிவு உச்சமன்ற உறுப்பினர் ஶ்ரீ முருகன் தெரிவித்தார்.
தெலுக் இந்தான் ஜசெகவின் கோட்டை என்று மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் அது 2018 பொதுத் தேர்தலோடு முடிந்து விட்டது. இனி இத்தொகுதியில் புதிய அத்தியாயம் எழுதப்படும்.
கடந்த பொதுத் தேர்தல்களில் தேசிய முன்னணியை குறை கூறியே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியை பிடித்தது. தேசிய முன்னணியை பலவீனமான அரசாங்கமாக சுட்டி காட்டி மக்களிடம் விஷமத்தனமான பிரச்சாரங்களை ஜசெக உட்பட பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியினர் மேற்கொண்டனர்.
தெலும் இந்தான் தொகுதி என்றும் ஜசெகவுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்து அல்ல. 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜசெக இத்தொகுதியை வென்றிருந்தாலும் 2014ஆம் ஆண்டு இத்தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஜசெக மண்ணைக் கவ்வி தேசிய முன்னணி வெற்றி கொடி நாட்டியதை சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் மறந்து விடக்கூடாது.
கடந்த தேர்தலில் தேமுவை குறை சொல்லி ஆட்சியை பிடித்த பக்காத்தான் கூட்டணி ஒரு படுமோசமான ஆட்சி வழங்கியதை மக்கள் இன்னமும் மறந்து விடவில்லை. கடந்த தேர்தலில் தேமுவை குறை சொல்லி ஆட்சியை பிடித்தவர்கள் இனி வரும் தேர்தலில் என்ன குறை சொல்லி வாக்குகளை சேகரிக்கப் போகிறார்கள்? அங்குள்ள வாக்காளர்களும் நடப்பு அரசியலை உணர்ந்துக் கொண்டிருக்கின்றனர்.
தேமுவின் ஆட்சியை குறை கூறினால் உங்களில் (பக்காத்தான் ஹராப்பான்) 22 மாத கால ஆட்சியின் பலவீனம் குறித்து கேள்வி எழுப்ப மக்கள் தயாராக உள்ளனர்.
மஇகாவை இந்தியர்களுக்கு எதிரான கட்சியை சித்திரித்து வாக்கு சேகரித்த காலம் மலையேறி விட்டது. பக்காத்தான் ஹராப்பான் இந்தியத் தலைவர்களை காட்டிலும் மஇகா தலைவர்களே மேலானவர்கள் என்பதை இந்த 22 மாத கால ஆட்சியில் இந்தியர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
மேலும் ஜசெக பல இன மக்களை உறுப்பினர்களாக கொண்ட கட்சி.. அதனால் இந்தியர்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. ஆனால் மஇகா இந்தியர்களின் பிரதிநிதி கட்சி. தேசிய அரசியல் நீரோட்டத்தில் இந்தியர்களுக்காகவே உருவாக்கப்பட்ட கட்சி என்பதையும் இந்தியர் உணர்ந்து விட்டனர்.
வரும். பொதுத் தேர்தலில் தெலுக் இந்தான. தொகுதியில் மஇகா போட்டியிடிவதற்கி ஆயுத்தமாக உள்ளது.
அதன் அடிப்படையில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் தேமு வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்படும் என்று ஶ்ரீமுருகன் தெரிவித்தார்.
தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியை நிச்சயம் தற்காப்போம் என்று பேரா மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவநேசனின் நாளிதழ் அறிக்கைக்கு பதிலடியாக ஶ்ரீமுருகன் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment