ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
கோவிட் 19 வைரஸ்
தொற்று அதிகமாக காணப்படும் சபா, கெடா மாநிலங்களை சிவப்பு மண்டல பகுதியாக அறிவித்து
அங்கு முழு மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) அமல்படுத்தப்பட வேண்டும் என்று
மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ தோ. முருகையா தெரிவித்தார்.
நாட்டில் 2ஆம் கட்ட அலையாக மீண்டும் உருவெடுக்கும் கோவிட்-19
வைரஸ் தொற்று கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து
உயர்வு கண்டு வருகிறது.
சபா மாநிலத் தேர்தலை முன்னிட்டு அங்கு பிரச்சாரம் மேற்கொண்டு
வந்த அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மக்கள், வணிகர்களால் மீண்டும் கோவிட்-19
வைரஸ் தொற்று தீபகற்ப மலேசியாவிலும் பெருமளவு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதனால் நாடு முழுவதும் பிகேபி மீண்டும் அமல்படுத்தப்படலாம்
என்ற அச்சம் மலேசியர்களிடையே ஏற்பட்டுள்ளது.
கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பை குறைப்பதற்கு ஏதுவாக நாடு
முழுவதும் பிகேபி அமல்படுத்துவதை விட அந்த பாதிப்பு அதிகமாக உள்ள சபா, கெடா மாநிலங்களில்
முழு அளவிலான பிகேபி-ஐ இரண்டு வாரங்களுக்கு அமல்படுத்தி பாதிப்பை கண்காணிக்க வேண்டும்.
அதன் பின்னர் நாடு முழுவதும் பிகேபி அமல்படுத்தலாமா? அல்லது
மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா? என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்று முன்னாள் துணை அமைச்சருமான டத்தோ முருகையா குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment