கோ.பத்மஜோதி
கோலாலம்பூர்-
மனிதவள அமைச்சு சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண மக்கள் இனி மஇகா அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்விலும் கலந்து கொள்ளலாம் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
சொக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னமும் உரிய தீர்வு காண முடியாமல் இந்திய சமுதாயத்தினர் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். அத்தகையோருக்கு சிறந்த தீர்வாகவே மனிதவள அமைச்சின் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடத்தப்படும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பொதுமக்கள் குறிப்பாக இந்திய சமுதாயத்தினர் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று இன்று முதல் நாளாக நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.
இன்றைய நிகழ்வில் 100க்கான பொதுமக்களுக்கு உயர்கல்வியை முடித்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு டத்தோஶ்ரீ சரவணனும் மனிதவள அமைச்சின் அதிகாரிகளும் தெளிவான விளக்கங்களை வழங்கினர்.
No comments:
Post a Comment