ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
மஇகாவுக்கு
பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்த சுங்கை சிப்புட் வாக்காளர்கள் இன்று சிறந்த பாடத்தை
கற்றுக் கொண்டுள்ளனர் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மஇகாவின் மீது
கொண்ட கோபத்தால் துன் சாமிவேலுவை தோற்கடித்த சுங்கை சிப்புட் வாக்காளர்கள் கடந்த
10 ஆண்டுகளில் எவ்வித பலனையும் அனுபவிக்கவில்லை என்பதை அங்கு சென்று கண்டபோது நானே
உணர்ந்திருக்கிறேன்.
இத்தொகுதியில் மஇகா தோல்வி கண்ட போதிலும் அங்குள்ளவர்களுக்கு சேவையாற்ற
ஒருபோதும் தவறியதில்லை. ஆனால் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எங்கே மாயமானார்?
என்பது தெரியவில்லை என்று இங்கு நடைபெற்ற கேபிஜே கூட்டுறவு கழகத்தின் விஸ்மா துன் சாமிவேலும்
கட்டடத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றியபோது டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment