சென்னை-
தமிழ் துறையுலகில்
பாடும் நிலவாக புகழ்பெற்று விளங்கி வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று
மரணமடைந்தார்.
ஆகஸ்ட் மாதத்
தொடக்கத்தில் கோவிட்-19 பாதிப்பால் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர்
மாதத் தொடக்கத்தில் கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதனிடையே நேற்று
உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த
போதிலும் மருத்துவச் சிகிச்சைகளுக்கு உடல் ஒத்துழைக்காத நிலையில் இன்று பிற்பகலில்
அவரது உயிர் பிரிந்தது.
திரை இசைத்துறையில்
தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 15 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை
பாடியுள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின்
மரணச் செய்தியை அடுத்து அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கலை
பகிர்ந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment